கிரிக்கெட்: டால்மியாவுக்கு நீதிபதி கடும் கண்டனம்
சென்னை:
ஜீ டிவிக்கு கொடுக்கப்பட்ட ஒளிபரப்பு உரிமையை இந்திய கிரிக்கெட் வாரியம், குறிப்பாக அதன் முன்னாள்தலைவர் ஜக்மோகன் டால்மியா ரத்து செய்தது முறைகேடான செயல். தனது வரம்புகளை மீறி டால்மியாசெயல்பட்டுள்ளார் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஜீ டிவிக்கு இந்திய கிரிக்கெட்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வழங்கியது. ஆனால் இந்த உரிமையை ஆகஸ்ட் 7ம் தேதி திடீரெனரத்து செய்து விட்டது. ஒளிபரப்பு உரிமைக்கான புதிய டெண்டரையும் அது அறிவித்தது.
இதை எதிர்த்து ஜீ டிவி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனுவைவிசாரித்த நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் டால்மியாவின் செயலை கடுமையாக கண்டித்தார்.
அவர் கூறுகையில், மிகவும் முறைகேடான வகையில் ஜீ டிவிக்கு அளிக்கப்பட்ட உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் வாரியத்தின், குறிப்பாக, அதன் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது, கடும் கண்டனத்துக்குரியது.
இந்த விஷயத்தில் டால்மியா மிகவும் சுய நலத்துடன், தனிப்பட்ட விரோதத்துடன் செயல்பட்டுள்ளார் என்பதுதெளிவாகத் தெரிகிறது. ஜீ டிவி தொடர்பான ஒவ்வொரு விஷயத்திலும் அவர் குரோத மனப்பான்மையுடன்செயல்பட்டுள்ளார்.
அவரது செயல்பாடுகள் சட்டவிரோதமானவை, கடும் கண்டனத்துக்குரியவை. அவரது செயலை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஜீ டிவிக்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி நிலைக்கு வந்த பின்னர் அதை டால்மியா நிராகரித்துள்ளார்.இது நியாயமே அல்ல.
மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவர் என்ற பெரும் பொறுப்பில் உள்ள டால்மியா தன்னிச்சையாக,தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டுள்ளார். அவசர கோலத்தில் டால்மியா செயல்பட்டுள்ளார் என ஜீ டிவிதரப்பு கூறுவதில் நியாயம் உள்ளது. அதை புறந்தள்ள முடியாது.
ஜீ டிவிக்கு எதிரான மனப்பான்மையுடன் டால்மியா நடந்து கொண்டுள்ளார் என்ற கருத்தையும் நிராகரிக்கமுடியவில்லை. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக உரிய வகையில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேடிக்கொள்ள ஜீ டிவிக்கு உரிமை உள்ளது.
தற்போது நடந்து வரும், இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்குப் பின், புதிதாக ஒளிபரப்பு உரிமைக்கானடெண்டர் விடப்பட வேண்டும். அதில் ஜீ டிவியும், ஈஎஸ்பிஎன் டிவியும் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றுகூறினார் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம்.












Click it and Unblock the Notifications