சிறுமியின் கண்ணை பறித்த ஆசிரியை?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

ஆசிரியை கொடுத்த தண்டனையால் 6வது வகுப்பு படிக்கும் சிறுமியின் கண் பார்வை பறிபோயுள்ளது.

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தனியார் உயர் நிலைப் பள்ளியில் 6வது வகுப்பு படித்து வருபவர் சரண்யா. மார்ச் 4ம் தேதிபள்ளிக்குச் சென்று திரும்பி சரண்யா வாந்தி எடுத்துள்ளார். மயக்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது தந்தை சக்திவேல், சரண்யாவை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். அங்கு சரண்யாவைப் பரிசோதித்த டாக்டர்கள் சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோகுமாறு கூறியுள்ளனர்.

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சரண்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவரது கண் பார்வையில் பிரச்சினைஏற்பட்டுள்ளதாக கூறி எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் விசாரித்தபோதுதான் நடந்ததைக் கூறியுள்ளார் சரண்யா. 4ம் தேதி வகுப்புக்குச் சென்றசரண்யாவை ஆசிரியை கற்பகம் திட்டியுள்ளார். பின்னர் சரண்யாவை சுவரோடு வைத்து மோதியதாகவும்கூறப்படுகிறது.

இதனால் கண்ணுக்குச் செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால்தான் சரண்யாவுக்கு பார்வைக்கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சரண்யாவுக்கு தற்போது வலது கண்ணில் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்துசக்திவேல் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் ஆசிரியை கற்பகம் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் இந்தப் புகாரை பள்ளி நிர்வாகி விஜயக்குமார் மறுத்துள்ளார். சம்பவ தினத்தன்று ஆசிரியை கற்பகம்,சரண்யாவை திட்ட மட்டுமே செய்துள்ளார். சரண்யாவே சுவரில் மோதிக் கொண்டுள்ளார்.

ஆசிரியை கற்பகத்திற்கும், சரண்யாவின் பெற்றோருக்கும் நிலத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துவருகிறது. இதன் காரணமாகவே ஆசிரியை மீது பொய்யான புகாரை அவர்கள் தெரிவித்துள்ளதாக பள்ளி நிர்வாகிகூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+