மத்திய அமைச்சர்களை ஜெ சந்தித்தால் என்ன?
வேலூர்:
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று கேட்கும் முதல்வர்ஜெயலலிதா, அந்த அமைச்சர்களை இதுவரை சந்தித்துப் பேசாதது ஏன்?. அவர்களை சந்திக்க ஜெயலலிதா ஏன்மறுக்கிறார்? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பாதுகாப்பு இயக்க ஊர்திப் பயணத்தை மேற்கொண்டுள்ள ராமதாஸ் வேலூரில் இன்று செய்தியாளர்களிடம்பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று ஜெயலலிதா தற்போதுஅடிக்கடி பேசி வருகிறார்.
நான் ஏற்கனவே கூறியுள்ளேன். முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் ஒருவரை நியமித்து, அவர் மூலம் மத்தியஅமைச்சர்களை தொடர்பு கொள்ள ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.ஆனால் அதை அம்மையார் செய்யவில்லை, அதற்கான ஆர்வமும் அவருக்கு இல்லை.
தமிழகத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர்களுடன் ஜெயலலிதாபேச வேண்டும். ஆனால் அவருக்கு அதில் விருப்பமும் இல்லை, தயாராகவும் இல்லை. ஆனால் தமிழகத்தைச்சேர்ந்த அத்தனை அமைச்சர்களும் இதுகுறித்து ஜெயலலிதாவுடன் பேசத் தயாராக உள்ளனர்.
தமிழக சட்டசபையில் தமிழ் மொழியை ஒரு பிரச்சினையாக கொண்டு போக வேண்டியதில்லை. இதை அரசும்,பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும்தான் செய்ய வேண்டும். தமிழர்கள் மனநிலையில் ஒட்டுமொத்தமாக மாற்றம்வர வேண்டும். அதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தமிழை வளர்க்க 75 சதவீதப் பணியை அரசுதான் செய்ய வேண்டும். மீதமுள்ள பணியை ஊடகங்கள் செய்யவேண்டும்.
1956ம் ஆண்டு காமராஜர் ஆட்சியின்போது தமிழ் ஆட்சி மொழியாக சட்டம் கொண்டு வந்தார். அது இன்னும்முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தஞ்சையில் 8வது உலக தமிழ் மாநாட்டை ஜெயலலிதா பிரமாண்டமாக நடத்தினார். அப்போது 10 அம்சஅறிவிப்புகளையும் வெளியிட்டார், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கத்தையும் வைத்தார். ஆனால் அதில்ஒன்றைக் கூட அவர் நிறைவேற்றவில்லை.
2வது முறையாக 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, மாநில நிர்வாகத்தில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதைஅதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் சட்டசபையில்ஆளுனர் உரையை தமிழில் கூட படிக்க முடியாத நிலையில்தான் இந்த அரசு தமிழை வைத்துள்ளது.
பாமகவினர் சட்டசபையில் தமிழ் குறித்துப் பேசினால், அதை ஆளுங்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். மிதிவண்டிஉதிரி பாகங்களுக்கு பெயர்களை தமிழில் சொல்ல முடியுமா என்று கேலி பேசுகிறார்கள்.
சர்வதேச சமுதாயத்தில் ஒரு பேட்டை ரவுடி போல அமெரிக்கா நடந்து கொள்கிறது. மனித உரிமை மீறல் என்று கூறிமோடிக்கு விசா மறுக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மனித உரிமை மீறல் என்றால்,அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் எந்த நாட்டுக்கும் போக முடியாது.
சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வரலாம். ஆனால், நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டி தேர்தல் வருவதற்கானவாய்ப்பே இல்லை. 5 ஆண்டுப் பதவிக் காலத்தையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முழுமையாகமுடிக்கும் என்றார் ராமதாஸ்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications