கடல் சுவர் கட்டும் திட்டம்: ஆய்வறிக்கை சமர்பித்தது ஐஐடி
சென்னை:
தமிழக கடலோரப் பகுதிகளை சுனாமி போன்ற பேரழிவுகளிலிருந்து காப்பதற்காக கடலோரப் பகுதிகளில் தடுப்புச்சுவர்கள் அமைப்பது தொடர்பான ஆய்வறிக்கையை சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி மையம் (ஐஐடி)தமிழக அரசிடம் அளித்துள்ளது.
தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.மேலும் இதுதொடர்பான ஆய்வறிக்கையை தருமாறு ஐ.ஐ.டிக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த ஆய்வுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 3.59 லட்சம் நிதியும் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஐஐடியின் கடல் ஆராய்ச்சிப் பிரிவினர், நிலவியல், புவியியல் மற்றும் சிவில் என்ஜினியரிங் பிரிவின்ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
தங்களது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இத் தகவலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தமிழக கடலோரப் பகுதிகளில் நீண்ட கடல் சுவர்களை கட்டுவது தொடர்பான ஆய்வுப் பணிக்குதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அந்த ஆய்வு தற்போது முடிவடைந்து, ஆய்வறிக்கை அரசுக்குசமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், சுவர் கட்டும் திட்டத்தை அமலாக்க மத்திய அரசு மூலமாக உலக வங்கி,ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் நிதியுதவியை தமிழக அரசு கோரும்.
தமிழக கடலோரப் பகுதியின் நீளம் 1,076 கிமீ. இதில் 1,016 கிமீ தூரம் வங்கக் கடல் பகுதியிலும், மீதமுள்ள பகுதிஅரபிக் கடல் பகுதியிலும் உள்ளது.
சுனாமி காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகள் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் பன்னீர் செல்வம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications