இந்தியா-பாக்: டெல்லி போட்டி இடம் மாறுமா?
டெல்லி:
பாகிஸ்தான் அணியுடன் டெல்லியில் நடைபெற உள்ள இறுதி ஒரு நாள் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படக்கூடும் என்றுதெரிகிறது.
இன்சமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்யணம் செய்து விளையாடி வருகிறது.இந்த இரு அணிகளுக்கும் இடையே 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்கியது.
இதன்பிறகு ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. முதல் ஒரு நாள் போட்டி கொச்சியில் ஏப்ரல் 2ம் தேதி தொடங்குகிறது.
இறுதி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியைப்பார்க்கத்தான் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இந்தியா வருவதாக உள்ளது.
ஆனால் டெல்லி மைதானம் இன்னும் போட்டிக்குத் தயாராகவில்லை. ஆடுகள சீரமைப்புப் பணி இன்னும் முடிவடையவில்லை.இதற்கிடையே ஒரு பகுதிப் பணி முடிவடைந்ததற்கான சான்றிதழை டெல்லி மாநகராட்சியிடம் டெல்லி கிரிக்கெட் சங்கம்கேட்டது.
ஆனால் மாநகராட்சி கொடுக்க மறுத்து விட்டது. இது தொடர்பாக டெல்லி மாநகராட்சி ஆணையாளர் ராகேஷ் மேத்தாகூறுகையில், போட்டியை பார்க்க வரும் ரசிகர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எனவே பணிகள் முடிவடையாத நிலையில்சான்றிதழ் தரமுடியாது என்றார்.
மைதானப் பணிகள் இன்னும் முடிவடையாததால் டெல்லியில் ஒரு நாள் போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம்ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் "பிட்ச் குழு 29ம் தேதி மைதானத்தை பார்வையிட உள்ளது.
அதன் பிறகே போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா என்பது தெரியவரும். இறுதி ஒரு நாள் போட்டியை நடத்த ஏற்கனவேஜெய்ப்பூர் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications