சுனாமி: தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள்- பஞ். தலைவர்கள் அடிதடி மோதல்; பதற்றம்
கடலூர்:
சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம் கிராமத்தில், பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதுமீனவர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
தமிழகத்திலேயே சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி தேவனாம்பட்டினம்.
இங்கு சுனாமி நிவாரணப் பணிகளை அரசு அதிகாரிகள் சரியான முறையில் வழங்கவில்லை என்று மீனவர்கள்குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து விவாதிக்க உள்ளூர் சமூக நலக் கூடத்தில் மீனவர்கள் கூடினர்.
அப்போது உள்ளூர் மீனவர் பஞ்சாயத்துத் தலைவர்களான குப்புராஜ், ராஜி, சதாசிவம் உள்ளிட்டோர் வந்தனர்.
எங்களை மீறி எப்படி நீங்கள் கூட்டம் நடத்தலாம் என்று கேட்டு மீனவர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதையடுத்து பஞ்சாயத்துத் தலைவர்களையும் அவர்களது அடியாட்களையும் மீனவர்கள் தாக்கினர். இதனால்அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.
இதுகுறித்து கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலரும், மீனவர் தலைவருமான சண்முகம் கூறுகையில், அரசுஏராளமான நிவாரண உதவிகளை அறிவித்துக் கொண்டுள்ளது. ஆனால் இங்குள்ள சில அதிகாரிகள் அவற்றைமுறைகேடாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பாதிக்கப்பட்டமீனவர்களுக்கு நிவாரணத்தை முறையாகக் கொடுக்காமல் முறைகேடு செய்கின்றனர். இதுகுறித்துமீனவர் பஞ்சாயத்துத் தலைவர் சதாசிவம், செயலாளர் குப்புராஜ், பொருளாளர் ராஜி உள்ளிட்டோரிடம் கோரிக்கைவிடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் தான் நாங்களாகக் கூடி பேசினோம். அப்போது அங்கு வந்து பஞ்சாயத்துத் தலைவர்கள் கலாட்டாவில்ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மீனவர்களில் சிலர் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர் என்றார்.
மோதல் குறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் எஸ்.பன்னீர் செல்வம், வருவாய்கோட்டாட்சியர் டாக்டர் பிரபாகர், தாசில்தார் மாரிமுத்து உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து மீனவர்களைசமாதானப்படுத்தினர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications