10ம் வகுப்பு வரை பாட புத்தகம் இலவசம்: ஜெ
சென்னை:
சென்னைதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள்வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்வி நிலை குறித்து சட்டசபையில் அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது,
தமிழகத்தில் தற்போது 8வது வகுப்பு வரை மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் 10ம்வகுப்பு வரை பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
இதனால் 12 லட்சம் மாணவர்கள் பலனடைவர். இலவச பாடப் புத்தகங்கள் பெறும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 97 லட்சமாக உயரும்.இந்தப் புதிய திட்டத்தின் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 61.45 லட்சம் செலவாகும்.
இதேபோல, வருவாய் ஈட்டும் தாயோ, தந்தையோ இறந்து விட்டால் அல்லது விபத்து காரணமாக நடமாட முடியாமல் நிரந்தர முடக்கமோஏற்பட்டால் படிப்பைப் பாதியில் கை விடும் நிலைக்கு ஏராளமான மாணவ, மாணவியர் தள்ளப்படுகிறார்கள்.
இத்தகைய அவல நிலையைப் போக்கும் விதத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும்மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தாயோ, தந்தையோ இறந்து விட்டால் அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டாலோ, பாதிக்கப்பட்ட மாணவ,மாணவியருக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.
இந்த நிதி, அரசு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி அவர்களது கல்விச் செலவுக்கு பயன்படுத்தப்படும்.
தமிழகத்தில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டு வரும் 1 கோடியே 12 லட்சம் மாணவ, மாணவியரில் ஒருவர் கூட தங்களது படிப்பை பாதியில் விடக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.
அனைவருக்கும் 8வது வகுப்பு வரை கல்வி என்பதை, திட்ட இலக்கான 2010ம் ஆண்டுக்குள் தமிழகம் எட்டி விடும். அதன் பிறகு 10வது வகுப்புவரை அனைவரும் பயில வேண்டும் என்ற திட்டத்தையும் தமிழகம் எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications