2 மாதம் ஊட்டியில் தங்கும் பர்னாலா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுனர் பர்னாலா, கோடை விடுமுறை ஓய்வுக்காக 2 மாதம் ஊட்டியில் தங்கப் போகிறார்.
கோடை காலத்தில் தமிழக ஆளுனர் பதவியில் இருப்பவர் ஓய்வுக்காக ஊட்டியில் தங்குவது வழக்கம். அந்த வகையில் பர்னாலாவும் ஏப்ரல்10ம் தேதி ஊட்டி செல்கிறார். ஜூன் முதல் வாரம் வரை அங்கு தங்கியிருப்பார்.
ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் பர்னாலா தங்குகிறார். இதையடுத்த ராஜ்பவன் மாளிகை தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏப்ரல் 16ம் தேதி ஊட்டிவருகிறார். அவரது நிகழ்ச்சிகளில் பர்னாலாவும் பங்கேற்பார்.












Click it and Unblock the Notifications