மோடியின் லண்டன் பயணம் நள்ளிரவில் ரத்து
அகமதாபாத்:
அமெரிக்காவுக்குச் செல்ல விசா மறுக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து பயணமும் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டுவிட்டது.
குஜராத்தில் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு, அதை முன்னின்று நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மோடிக்கு அதையே காரணமாகச்சொல்லி விசா தர மறுத்துவிட்டது அமெரிக்கா. இதனால் அந் நாட்டுக்குப் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் மோடி.
இந் நிலையில் நேற்று இங்கிலாந்து செல்லத் திட்டமிட்டார் மோடி. ஆனால், அங்கு மோடியின் உயிருக்கு பாதுகாப்பு இருக்காது என உளவுப்பிரிவுகள் எச்சரித்தன.
இதையடுத்து மோடியை பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் தொலைபேசியில் அழைத்து, இங்கிலாந்துசெல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் அதைத் தொடர்ந்து தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மோடி ரத்துசெய்துவிட்டதாகவும் அவரது உதவியாளர் தெரிவித்தார்.
ஆனால், மோடியிடம் பிரதமர் பேசவில்லை என்றும், மத்திய உள்துறை அமைச்சர் மட்டுமே பேசியதாகவும் பிரதமர் அலுவலகம்தெளிபடுத்தியுள்ளது.
சிவராஜ் பாட்டீல் பேசிய பிறகு பிரதமரை மோடியே தொடர்பு கொண்டதாகவும், நான் லண்டன் பயணத்தை ரத்து செய்கிறேன் என்றுஅறிவித்ததாகவும் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
நள்ளிரவில் விமானம் ஏற சில மணி நேரங்களே இருந்த நிலையில் மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது.
மோடிக்கு எதிராக போராட்டங்கள் நடத்த இங்கிலாந்தின் பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. அவரைக் கைது செய்யக் கோரிவழக்குத் தொடரவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன.
மேலும் மோடியை குறி வைக்க அல்-கொய்தா, தாவூத் இப்ராகிம் கும்பல்களும் தயாரானதான உளவுப் பிரிவுகள் தகவல் தந்ததையடுத்துஇப் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications