விண்ணில் நடந்த சர்வதேச விண் நிலைய வீரர்கள்
கேப் கனாவெரல் (புளோரிடா):
சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள இரு வீரர்கள் இன்று விண்ணில் நடந்தனர்.
விண்வெளி மையத்தின் வெளியே ஆண்டெனாவைப் பொறுத்தவும், சிறிய செயற்கைக் கோளை வெளியில் செலுத்தவும் இந்தஸ்பேஸ் வாக்கை அவர்கள் மேற்கொண்டனர்.
கமாண்டர் லெரோய் சியாவோ (அமெரிக்கர்) மற்றும் சாலிஸ்ஸான் சரிபோவ் (ரஷ்யர்) ஆகிய இருவரும் பல சிக்கல்களுக்குஇடையே இந்த சாகஸத்தை மேற்கொண்டனர்.
விண்வெளி மையத்திற்கு வெளியே இருவரும் நடந்து இந்தப் பணிகளை மேற்கொண்டபோது, அது பூமியிலிருந்து 310 கி.மீ.உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
சில மாதங்களுக்கு முன் இருவரும் விண்ணில் நடந்தபோது, விண்வெளி மையத்தின் சிறிய ராக்கெட் மோட்டாருUS (firingthrusters) வெகு அருகில் சென்றார் லெரோய். அப்போது அந்த ராக்கெட் செயல்பட்டிருந்தால் எரிந்து சாம்பலாகியிருப்பார்லெரோய்.
இதனால் இம்முறை மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமலாக்கப்பட்டிருந்தன. இதன்படியே இருவரும் விண்ணில் மிதந்துஆண்டெனாவைப் பொறுத்தினர்.
விண்ணில் கட்டப்பட்டு வரும் இந்த சர்வதேச விண்வெளி மையத்தை சரியான திசையில், கோணத்தில் பறக்கச் செய்யும் மூன்றுஜைராஸ்கோப்புகளில் ஒன்று பழுதாகிவிட்டது. இதனால் இரு ஜைராஸ்கோப்களுடன் இந்த மையம் விண்ணில் சுற்றிக்கொண்டுள்ளது.
இதனை சரி செய்யும் பணியிலும் இந்த இரு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த மையத்தைக் கட்டும் பணிகள் கொலம்பியாவிண்வெளி ஓட விபத்துக்குப் பின் பெரும் தாமதமடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தனது ஷட்டில் விண்வெளி ஓடங்களை இயக்குவதை ரத்து செய்துவிட்டதால், இப்போது இந்த இரு வீரர்களுக்கும்தேவையான உணவு, கருவிகள், நீர் போன்றவை ரஷ்ய ஆளில்லா ராக்கெட்டுகள் மூலமே அனுப்பட்டு வருகின்றன.
இந்த வீரர்கள் இருவரும் விரைவில் பூமிக்குத் திரும்ப உள்ளனர். அதற்கும் ரஷ்ய சோயுஸ் விண்கலமே பயன்படுத்தப்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications