சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராவாரா காளிமுத்து?: பதவிக்கு ஆபத்து
சென்னை:
ராபின் மெயின் மோசடி வழக்கு ஏப்ரல் 27ம் தேதி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம்சபாநாயகர் காளிமுத்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்று தெரிகிறது.
இந் நிலையில், மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணையை சந்திக்கும் காளிமுத்து தானாகவே பதவி விலக வேண்டும் என்றுதமிழக பாஜக கோரியுள்ளது. பிற கட்சிகளும் இதே கோரிக்கையை முன் வைத்து நெருக்கத் திட்டமிட்டுள்ளதால், காளிமுத்துபெரும் சிக்கலில் மாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில், வேளாண்துறை அமைச்சராக காளிமுத்து இருந்தபோது, அவரது பரிந்துரையின் பேரில்,கேரளாவைச் சேர்ந்த ராபின் மெயின் என்பவர் தேசியமயமாக்கப்பட்ட பல்வேறு வங்கிகளில் ரூ. 56 லட்சம் அளவுக்கு கடன்வாங்கினார்.
இந்தக் கடன் தொகைக்கான அடமானப் பத்திரங்களாக ராபின் மெயின் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியாவைஎன்பது பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து ராபின் மெயின், காளிமுத்து உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
நீண்ட காலமாக இருந்து வரும் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காளிமுத்து மனு தாக்கல்செய்தார். ஆனால் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் காளிமுத்து அப்பீல் செய்திருந்தார். அந்த அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,காளிமுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும்சிபிஐ நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் ஏப்ரல் 27ம் தேதி ராபின் மெயின் வழக்கு மீண்டும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து, அன்றைய தினம் காளிமுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகியே தீர வேண்டும்.
ராஜினாமா செய்ய கோரிக்கை:
இதற்கிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன்,
ராபின் மெயின் மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காளிமுத்துவுக்குஉத்தரவிட்டுள்ளது.
இதை மதித்து தானாகவே தனது பதவியை காளிமுத்து ராஜினாமா செய்ய வேண்டும். அது புதிய, நல்ல மரபாக அமையும்.பேரவையில் தனது அதிகாரத்தை அத்துமீறிப பயன்படுத்தி வருகிறார் காளிமுத்து. அது கண்டனத்துக்குரியது.
முதல்வர் மற்றும் சபாநாயகரைக் கண்டித்து இதுவரை வெளிநடப்பு செய்து வந்த திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், ஒரு வாரகாலத்திற்கு சட்டசபையை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களுக்கு ஆற்ற வேண்டியகடமையிலிருந்து திமுக உள்ளிட்ட கட்சிகள தவறிவிட்டன என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications