சென்னையில் இன்னொரு சாப்ட்வேர் பார்க்
சென்னை:
சென்னையில் ரூ. 480 கோடி செலவில் இரண்டாவது தகவல் தொழில்நுட்பப் பூங்கா (டைடல் பார்க்) அமைக்கப்படும் எனதொழில்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன் இன்று சட்டசபையில் அறிவித்தார்.
தொழில்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து அமைச்சர் நைனார் நாகேந்திரன் பேசுகையில்,
ஏற்கனவே சென்னை தரமணியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை விட (இது திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது)அதி நவீன வசதிகள், சிறந்த அடிப்படைக் கட்டமைப்புடன் கூடிய இரண்டாவது தகவல் தொழில்நுட்பப் பூங்கா ரூ. 480 கோடிமதிப்பில் சென்னையில் உருவாக்கப்படும்.
சிங்கப்பூர் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த இரண்டாவது பூங்கா அமைக்கப்படும். இங்கு 17,000 பேர் பணியாற்ற முடியும் என்றார்.
நாங்குனேரி திட்டம் பணால்?:
இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள தொழில்நுட்பப் பூங்காவுக்குதரப்பட்ட அனுமதியை நாங்கள் ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதுமத்திய அரசு.
மத்தியில் வர்த்தக அமைச்சராக இருந்த மறைந்த முரசொலி மாறனின் முயற்சியால் நாங்குனேரியில் அமெரிக்காவுடன் இணைந்துதொழில்நுட்பப் பூங்கா அமைக்க 1998ம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி தந்தது.
நாங்குனேரியில் உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளை நிறுவவும், இதன்மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களைஉருவாக்கவும் திட்டமிடப்பட்டது.
இத் திட்டத்துக்குத் தேவையான முதலீட்டைத் திரட்டவும், திட்டத்தை நிறைவேற்றவும் அட்மேக் என்ற நிறுவனத்திடம் முந்தையதிமுக அரசு பொறுப்பை ஒப்படைத்தது. இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இந் நிலையில் இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் நைனார் நாகேந்திரன்,
நாங்குனேரி தொழில்நுட்பப் பூங்காவை அமைக்க திமுக ஆட்சியில் அட்மேக் என்ற நிறுவனத்திடம் நிதி திரட்டும் பொறுப்புஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந் நிறுவனத்தால் போதிய முதலீடுகளை கொண்டு வர முடியவில்லை.
இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, இத் திட்டத்துக்கு தரப்பட்ட அனுமதியை நாங்கள் ஏன் ரத்துசெய்யக் கூடாது என்று கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய வர்த்தகத்துறை.
நாங்கள் இந்த திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். 2001ம் ஆண்டில் இத் திட்டத்துக்காக 1,567நிலத்தை ஒதுக்கித் தந்ததோடு, 6.77 மில்லியன் காலன் நீரை தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுத்துக் கொள்ளவும் அனுமதிதந்துவிட்டோம்.
ஆனால், திமுகவால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அட்மேக் நிறுவனத்தால் அதற்கான நிதியைக் கூட திரட்ட முடியவில்லை.இரண்டரை ஆண்டுகளாக இத் திட்டத்தில் ஒரு கல் கூட நகரவில்லை. அப்படிப்பட்ட நிறுவனத்தைத் தான் திமுக ஆட்சியில் தேர்வுசெய்தார்கள்.
இது தொடர்பாக அட்மேக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சார்லஸ் லுக்சுக்கு பல முறை மாநில அரசு கடிதம்எழுதிவிட்டது. ஆனால், அவர் மேலும் கால அவகாசம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறாரே தவிர, திட்டத்தை தொடங்குவதற்கானவழியைக் காணோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications