தூத்துக்குடியில் நில நடுக்கம்; மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதிகளில் நேற்றிரவு 11.45 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதால்பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், குளத்தூர், தருவைக்குளம், வேலாயுதபுரம், எட்டையபுரம், கோவில்படடி, மட்டக்கடை,புதியம்பத்தூர் மற்றும் தூத்துக்குடி நகரின் சில பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

நில நடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் பெரும் சப்தமும் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். நில அதிர்வைத் தொடர்ந்து வீடுகளில்தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர். குடும்பத்துடன் பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைந்தனர்.

இந்த நிலநடுக்கம் 2 வினாடிகளுக்கே நீடித்துள்ளது. இந்த நில அதிர்வினால் பொருட்களுக்கோ, உடமைகளுக்கோ எந்தவிதபாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து சென்னையில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கு சுமத்திரா தீவில் புதன்கிழமை இரவு 10.56 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் எதிரொலியாகவே தூத்துக்குடிமாவட்டத்தின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதன் அளவு 5.6 ரிக்டராக பதிவாகியுள்ளது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு ஏற்பட்ட இந்த திடீர் நில நடுக்கத்தால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர். ஏற்கனவே கடல்உள்வாங்குவதும், வெளியே வருவதாக கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருப்பதால் பீதியடைந்துள்ள பொதுமக்கள் நிலஅதிர்வும் வந்துள்ளதால் என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+