போப் ஆண்டவர் உடல்நிலை கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

வாடிகன்:

போப் ஆண்டவர் உடல்நிலை இன்று மிகவும் மோசமானது. கடுமையான காய்ச்சல் அடிப்பதால் மருத்துவக் குழுவினர் அவரைமருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த மாதம்ரோமிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது.

இதன் பிறகு மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகும் அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. கடந்த சிலதினங்களாக அவரது உடல் நிலை மேலும் மோசமானது.

இதனால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்படவில்லை. வாடிகன் நகரிலேயே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவருக்கு இன்று கடுமையான காய்ச்சல் அடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு 2 முறை மாரடைப்பு வந்ததாகவும்தெரிகிறது. இதனால் அவரை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

படுத்த படுக்கையாகக் கிடக்கும் போப் ஆண்டவரின் அறைக்கு அருகே ஒரு பாதிரியார், ஆத்ம பரிசுத்த பிரார்த்தனைநடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்குத் தான் இது போன்ற பிரார்த்தனைநடத்துவது வழக்கம்.

அவரது உடல் எடையும் மிகவும் குறைந்து விட்டது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எந்த நேரத்திலும்எதுவும் நடக்கலாம் என்று வாடிகன் நகர செய்தித் தொடர்பாளர் ஜாக் வால்ஸ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+