ஜெவிடம் எம்ஜிஆர் பட்டபாடு: கருணாநிதி பேச்சு
சென்னை:
சட்டசபையில் என் சாதியைப் பற்றி பேசியதை நான் இழிவாக கருதவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
எங்களுடன் பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தொகுதிகளை பங்கீடு செய்வதில்முதலாளித்துவ கொள்கையில் நடந்து கொள்ள மாட்டோம். யாருக்கு எந்த இடம் வேண்டுமோ அதை பேசி பங்கிட்டுக் கொள்வோம்.
கூட்டணி கட்சிகளுக்குள் சண்டையை மூட்டி எங்களை வீழ்த்தி பிரித்து விடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். 4 எருமை மாடுகள் ஒன்றாகஇருந்தால் அதை ஒன்றும் செய்யமுடியாது.
எனவே தந்திரகார புலியோ, கரடியோ அதை தனியாக பிரித்தால் அடித்து சாப்பிட்டு விடலாம் என்று நினைப்பது போல் எங்களையும்பிரிக்க நினைத்தால் அது நடக்காது. எங்களுக்குள் மோதலை உருவாக்கி கூட்டணியை உடைக்க நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.எங்களது கூட்டணி உறுதி வாய்ந்த கூட்டணி.
தமிழக மக்கள் தெளிவு படைத்தவர்கள். அவசரக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு தமிழ் பண்பாடு தெரியும். தமிழைக் காப்பாற்றவும் தெரியும்.
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளது என்று ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ளார். இதை தேர்தல் ஆணையமேஒத்துக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி விசாரணை நடத்த தாமஸ் என்பவர் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்கள் பற்றி விசாரணை நடத்தத் தான். இதை உச்சநீதிமன்றத்திற்குகொண்டு போகப்போவதாகவும் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் மோசடி நடந்திருப்பதால் மீண்டும் மறுதேர்தல் நடத்தக் கோரி வழக்கு போடப் போவதாகவும் கூறினார். அவர்எப்போது வழக்கு போடப்போகிறார் என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்முடைய எஸ்.ஆர்.பி. உட்பட பலரை ஜெயலலிதா சகட்டுமேனிக்கு தாக்குவதாக இங்கு பேசியவர்கள் கூறினார்கள். என்னுடையஅருமை நண்பர் எம்.ஜி.ஆர். அந்த அம்மையாரிடம் என்ன பாடுபட்டார் என்று எனக்குத் தெரியும்.
அதை எண்ணிக் கொண்டு, டாக்டர் அய்யாவையும், எஸ்.ஆர்.பியையும், கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களையும் அல்லது எங்களைப் பற்றிபேசினால் நான் ஆறுதல் அடைவேன். ஏனென்றால் எம்.ஜி.ஆரையே அப்படிப் பேசியிருக்கிறாரே, அவர் படாத பாடா என்று நான்எண்ணிக் கொள்வதுண்டு.
சாதியைக் குறிப்பிட்டு பேசினாார்கள், சமூகத்தை குறிப்பிட்டு பேசினார்கள் என்றார்கள். நானே சொல்லிக் கொள்வது தானே? அதில் என்னதவறு? நான் என்ன பிராமணன் என்று சொல்லிக் கொண்டேனா? நான் இசை வேளாளன் இல்லை என்று பொய் உரைத்தேனா?
நான் உயர் சாதியில் பிறந்தவன் என்று சொன்னேனா? பிரம்மாவின் முகத்தில் உதித்தவன் என்று சொன்னேனா? தோளில் பிறந்தவன்என்றோ, தொடையில் பிறந்தவன் என்றோ சொன்னேனா? எனவே இதைச் சொல்லி யாரும் என்னை இழிவு படுத்திவிட்டதாக நான்கருதவில்லை என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications