ஜெயலலிதா Vs
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கும் காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே அறிக்கை போர்தீவிரமாகியுள்ளது.
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் அறிக்கையில் எனக்கு எதிராக அவர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ஆட்சேபரகமானவை.இவற்றை எஸ்.ஆர்.பி. அவராகவே பேசினாரா, அல்லது முகத்தைக் காட்ட விரும்பாத ஒருவர் (கருணாநிதி) பின்னால் இருந்து கொண்டுஅவ்வாறு எஸ்ஆர்பியை பேச வைத்தாரா?
எஸ்.ஆர்.பியின் பேச்சு நிதானம் இழந்த ஒருவரின் வார்த்தைகளாக உள்ளன. அவர் நிலைதடுமாறிப் போயிருக்கிறார்.
நான் சாம்பலாக வேண்டும் என்று சாபம் கொடுக்கும் குழாய்ச் சண்டை கோமாளிகளுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.நான் பீனிக்ஸ் பறவை. நான் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவது சத்தியம்.
ஆனால், சட்டசபைக்கே வராமல் ஈசிசேரில் அமர்ந்து கொண்டு, கூட்டணிக் கட்சியினரின் குடும்ப டிவியில் மெகா சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் மகா பொய்யர்களாகிய அரசியல்வாதிகள் (எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள்) வீழ்ந்தால் வீழ்ந்தது தான்.
ஊதுகுழல்களுக்கு (எஸ்.ஆர்.பி) ஏது உரிமை?. மக்கள் எந்த இடத்தில் வைக்கிறார்களோ அந்த இடத்தில் இருக்க வேண்டியது தான் அதன்கடமை.
இவ்வாறு எஸ்.ஆர்.பியை போட்டு வாங்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு பதிலடி:
ஜெயலலிதாவால் காய்ச்சி எடுக்கப்பட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் சும்மா இருப்பாரா?... விட்டார் ஒரு பதில் அறிக்கை. அதன் விவரம்:
ஜெயலலிதாவின் அறிக்கைகளைத் தயாரிக்க, சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருந்த ஒரு நபர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.மக்களோடும் மண்ணோடும் ஒட்டாத இந்த உரைகள் தான் ஜெயலலிதாவின் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தன.
குழாயடிச் சண்டை கோமாளிகள், போக்கிரிகள், பொல்லாதவர்கள், சூழ்ச்சிக்காரர்கள், குறுமதியாளர்கள் ஆகிய தரம் தாழ்ந்த சொற்களை,தமிழ் மொழிக்கே இழிவு சேர்க்கும் இந்த வார்த்தைகளை தங்கத் தாரகை (சமீபத்தில் தங்கத் தாரகை விருது பெற்றார் ஜெ)பயன்படுத்தியிருக்கவே மாட்டார்.
அடுத்துக் கெடுப்பதும், சூழ்ச்சி வலைகள் பின்னுவதும், சுயநலத்தால் கோட்டை கட்டுவதும், ஏமாந்த காலத்தில் ஏற்றம் பெறுவதும்தங்களுடையே உடன்பிறந்த குணங்களாகக் கொண்டிருக்கும் மனிதர்களால் (சசி அண்ட் கோ??) தான் முதல்வர் ஜெயலலிதா தடம்புரள்கிறார்.
ஜெயலலிதா மீது கொண்டுள்ள உண்மையான அக்கறையின் காரணமாக சொல்கிறேன். அவருக்கு மிகச் சிறந்த மனநிலை மருத்துவ சிகிச்சைஅளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கை விட்டிருக்கிறார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.
இதற்கு போயஸ் கார்டனில் என்ன பதில் தயாராகிக் கொண்டிருக்கிறதோ?... பகவானே..












Click it and Unblock the Notifications