சேது சமுத்திரம்: 41 நிபந்தனைகளுடன் அனுமதி
சென்னை:
41 நிபந்தனைகளுடன், சேது சமுத்திரத் திட்டத்தை தொடங்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து திட்டம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. தமிழக அரசுதான் திட்டம் தொடங்க தாமதம் என மத்தியதிமுக அமைச்சர்களும், மத்திய அரசுதான் காரணம் என முதல்வர் ஜெயலலிதாவும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் கப்பல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அமைச்சர்களான ஏ.ராஜா, டி.ஆர்.பாலு ஆகியோர்தான் திட்டம்தாமதமாக காரணம் என ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். மேலும் திட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் பல்வேறுசந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சேது சமுத்திரத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 41 நிபந்தனைகளுடன் அனுமதிவழங்கியுள்ளது.இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஏ.ராஜா டெல்லியில் கூறுகையில், கடும் நிபந்தனைகளுடன் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளோம். எங்களது வேலை முடிந்து விட்டது. நிதி திரட்டுவது, திட்டத்தைஅமலாக்குவது ஆகியவை கப்பல்துறையின் வேலையாகும் என்றார்.
இதேபோல சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறுகையில், 1994ம் ஆண்டுசுற்றுச்சூழல் (விளைவு) ஆய்வு அறிக்கையின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 22 சிறப்பு நிபந்தனைகளும் 19பொதுவான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக மார்ச் 31ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தமிழக மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் கொடுத்த அறிக்கை, தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றைஅடிப்படையாகக் கொண்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் மிகப் பெரிய திட்டம். எனவே இதை நிறைவேற்ற நிதி ஒரு பிரச்சினையாக இருக்காது. முதல் கட்டமாக ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்துள்ள அனுமதி மத்திய அமைச்சரவை முன்பு ஒப்புதலுக்கு வைக்கப்படும். அதற்கு முன்பாகபொது பங்குகள் வாரியம், மத்திய நிதியமைச்சகம், திட்டக் கமிஷன் ஆகியவற்றின் அனுமதியும் பெறப்பட வேண்டும்.
திட்ட நிதியில் 2 சதவீதம் அதாவது ரூ. 50 முதல் 60 கோடி வரை, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்களின் மறுவாழ்வுப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றார் பாலு.
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டால், நான்கு ஆண்டுகளில் நிறைவேறும். இருப்பினும் இன்னும் 3துறைகளின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியிருப்பதைப் பார்த்தால் திட்டம் தொடங்கமேலும் தாமதமாகும் என்று தெரிகிறது.
அதேசமயம், சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஆட்சேபனை இல்லா சான்றிதழ் தர தமிழக அரசு தாமதம் செய்வதாக மத்தியஅமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு ஆகியோர் கூறி வந்த வாதம் வலுவிழந்துள்ளதும் தெளிவாகியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications