திருவண்ணாமலை கோவிலை கையகப்படுத்த மாட்டோம்: தொல்பொருள்துறை
புதுடெல்லி:
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலை எடுத்துக் கொள்ளும் திட்டம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில், இந்தியதொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தொல்பொருள் ஆய்வுத் துறையின் இந்த அறிவிப்புக்கு திருவண்ணாமலை மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.தொல்பொருள் துறையின் நடவடிக்கையை எதிர்த்து அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள்தினசரி திருவண்ணாமலையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் புராதனமானது, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவிலை தொல்பொருள் ஆய்வுத்துறை எடுத்துக் கொண்டால் கோவிலின் புனிதம் கெட்டு விடும், சுற்றுலாத் தலமாகி விடும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
தொல்பொருள் துறையின் முடிவுக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெவித்தது. இதைத் தொடர்ந்து தனது முடிவை திரும்பப் பெறுவதாகதொல்பொருள் ஆய்வுத் துறை அறிவித்தது.
இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இதை பரிசீலித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தொல்பொருள்துறைக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தொல்பொருள்துறையின் இயக்குநர் டாக்டர் கே.பி.பூனச்சா உச்சநீதிமன்றத்தில் அளித்த பதில் மனுவில்,திருவண்ணாமலை கோவில் மிகவும் பாரம்பரியமானது, புராதனமானது. ஆனால் அதன் புனிதம் மற்றும் புராதனம் கெடும்வகையில் மலையைச் சுற்றிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், நவீன கட்டடங்களின் பெருக்கத்தால், சுற்றுச்சூழலும், மலையின் அழகும் கெட்டுவிட்டது. இதைப் பாதுகாக்கும்வகையில்தான் கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் தற்போது அந்தத் திட்டம் எங்களிடம்இல்லை. இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப் போவதில்லை என்று பூனச்சா தெரிவித்திருந்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications