கேரள பெண்ணிடம் ரூ. 16,000க்கு குழந்தையை விற்ற தமிழக தம்பதி!

Subscribe to Oneindia Tamil

கொல்லம்:

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த குழந்தையில்லா தம்பதியிடம், ரூ. 16,000க்கு விற்கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டரைவயது பெண் குழந்தையை தமிழக போலீஸார் மீட்டனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெற்றோர், தங்களது இரண்டரை வயது பெண் குழந்தையை கொல்லத்திற்குக் கொண்டு சென்று, அங்குகுழந்தையில்லாத ஒரு பெண்ணிடம் ரூ. 16,000 பெற்றுக் கொண்டு குழந்தையைக் கொடுத்துள்ளனர்.

பின்னர் அத் தம்பதியினர் ஊர் திரும்பினர். குழந்தையுடன் வெளியூர் சென்ற கணவனும், மனைவியும் குழந்தை இல்லாமல் திரும்பியதைக்கண்டு சந்தேகமடைந்த ஊர் மக்கள் போலீஸில் புகார் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியபோது குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அழைத்துக்கொண்டு போலீஸார் கொல்லம் விரைந்தனர்.

அங்கு ஒரு ஆட்டோ டிரைவரின் உதவியுடன் குழந்தையை வாங்கிய பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்தனர்.

கொல்லத்தில் உள்ள திருமுல்லவரம் பகுதியைச் சேர்ந்த ஷியாமளா என்பவர்தான் குழந்தையை வாங்கினார் என்பது தெரிய வந்தது.இவருக்கு குழந்தை இல்லை, கணவர் வளைகுடாவில் வேலை பார்த்து வருகிறார்.

அவரிடமிருந்து குழந்தையை போலீஸார் மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+