மாநகராட்சி இடைத் தேர்தல்: மத்திய போலீஸ் பாதுகாப்பு கோருகிறது திமுக
சென்னை:
![]() |
அதிமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் நடக்கும் இடைத் தேர்தல்களில் அமைச்சர்களே நேரடியாகக் களத்தில் குதித்து தேர்தல்வெற்றிக்காக ருத்ரதாண்டவம் ஆடுவதுண்டு.
இந் நிலையில் சென்னை மாநகராட்சியின் 110, 131 ஆகிய வார்டுகளுக்கு வருகிற 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்கான திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் களத்தில்குதித்துள்ளனர். இப்போதே இரு தரப்பினருக்கும் இடையே முட்டல், மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. தேர்தல் நாளில் என்ன நடக்குமோஎன அப் பகுதி மக்கள் மிரண்டு போயுள்ளனர்.
இந் நிலையில் வட சென்னை திமுக எம்.பி. செ.குப்புசாமி தலைமையில் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் குழுவினர் ஆளுனர் பர்னாலாவைசந்தித்து ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அதேபோல, 2004ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடந்த 2 வார்டுகளுக்கான இடைத் தேர்தலிலும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதிநடந்த வார்டு இடைத் தேர்தலிலும் பயங்கரமான வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின. இந்த சம்பவங்களின்போது போலீஸார் தங்களதுகடமையிலிருந்து தவறினர்.
இந் நிலையில் வரும் 19ம் தேதி சென்னை மாநகராட்சியின் 110, 131 ஆகிய இரு வார்டுகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதிலும் அரசும் அதிமுகவினரும் சேர்ந்து வன்முறைகளை நடத்தலாம் என அஞ்சுகிறோம்.
எனவே, தமிழக போலீஸாருக்குப் பதில் மத்திய ரிசர்வ் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். வாக்குப் பதிவைவீடியோ படம் எடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை திமுக கவுன்சிலர்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளனர்.
இடைத் தேர்தல் அமைதியாகவும், ஜனநாயகரீதியிலும் நடந்தேற வசதியாக, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாநில தேர்தல்ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு திமுகவினர் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications