ரூ. 31 கோடியை சுருட்டிய திமுகவினர்: அமைச்சர் புகார்
சென்னை:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் திமுகவினர் ரூ. 31 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சட்டசபையில் இன்று நிதித்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர்ராஜரத்தினம்,
ராஜரத்தினம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே திமுகவினர் எழுந்து அவருக்கு எதிராக கூச்சலிட்டனர்.
திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசுகையில், எங்கள் தலைவர் குறித்து அதிமுக எம்எல்ஏ பாசிஸமான, தகாத வார்த்தைகளைபேசுகிறார். மத்திய அரசில் திமுக இடம் பெற்றுள்ளது. மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே எங்கள் தலைவர் மத்திய அரசிடம்சில துறைகளை கேட்டு வாங்கினார். அதில் என்ன தப்பு?
அந்த இலாக்காக்களை வாங்கியதால் தான் சேது சமுத்திரத் திட்டம், சென்னையில் மேம்பாலங்கள் வந்து கொண்டிருக்கின்றன.அரசியலே தெரியாத ராஜரத்தினத்துக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.
இதையடுத்துப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், சிவகங்கை கூட்டுறவு வங்கி முடக்கப்பட்ட பிரச்சினையில் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தை கண்டித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு பதில் சொல்ல முயன்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, நேற்று சிதம்பரத்துக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையை திரும்ப வாசித்தார்.இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அதை சபாநாயகர் காளிமுத்து ஏற்கமறுத்தார். இதையடுத்து அந்த அறிக்கையை முழுவதுமாக வாசித்தார் ஜெயலலிதா.
இதையடுத்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜெயராமன்: இந்தியாவில் பல கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தில்இயக்குகின்றன. அதில் சிவகங்கை கூட்டுறவு வங்கியும் ஒன்று. ஆனால், அம்மா அவர்களின் சீரிய நிர்வாகத்தால் இந்த வங்கிலாபத்தை ஈட்டி வருகிறது. ஆனால், மத்திய நிதியமைச்சர் இந்த வங்கி குறித்து மக்களிடையே பீதி ஏற்படுத்தும் வகையில்தவறான செய்தி வெளியிட்டுள்ளார். வங்கியை முடக்கியுள்ளார்.
இந்த வங்கி திமுக ஆட்சியில் தான் நொடிந்து சின்னா பின்னாமானது. திமுக எம்எல்ஏ சிவராமன் இந்த வங்கியின் தலைவராகஇருந்தபோது 175 ஊழியர்களின் சம்பளத்தையும் கூட்டினார். இதனால் வங்கி நஷ்டத்தில் விழுந்தது.
வங்கியின் கடன்களை திமுகவினரே பெற்றனர். 1996 முதல் 2000ம் ஆண்டு வரை கூட்டுறவுத் துறையில் பெரிய சுனாமியையேஏற்படுத்திவிட்டுச் சென்றார்கள் திமுகவினர். பண்ணை சாரா கடன்களாக ரூ. 31 கோடியை திமுகவினரே பெற்றுள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களில் ஏழை, எளிய மக்களின் பணத்தை இவ்வாறு திமுகவினர் சுருட்டிவிட்டனர் என்றார் அமைச்சர்.
முதல்வர் ஜெயலலிதா: வங்கி முடக்கம் குறித்து மாநில அரசுக்குக் கூட மத்திய அரசு தகவல் தரவில்லை. அமைச்சர் சிதம்பரத்தின்தூண்டுதலால் தான் இது நடந்தது.
அமைச்சர் ஜெயராமன்: திமுக ஆட்சியில் நடந்த முறைகேட்டை எங்கள் மூலம் வெளியில் கொண்டு வர சிதம்பரம் முயற்சிசெய்கிறார் என்று நினைக்கிறேன். 755 திமுகவினர் கடன் வாங்கிவிட்டு பணத்தை வசூல் செய்யவிடாமல் நீதிமன்றத்தில் தடைஉத்தரவை வாங்கியுள்ளனர்.
துரைமுருகன்: இந்த அரசு எத்தனையோ வழக்குகளில் நீதிமன்றத்தை அணுகி புதிய ஆணையை வாங்கியுள்ளது. அதுபோலதிமுகவினர் தவறு செய்திருந்தால் இதிலும் மறு ஆணையை வாங்க வேண்டியது தானே? என்றார்.
திமுக உறுப்பினர் பொன்முடி பேசுகையில், வாராக் கடன்களை வசூலிக்க அரசு தவறியதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.கடன்களை வசூலிக்க தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications