புத்த மதத்திற்கு மாறும் 500 தலித் குடும்பங்கள்!
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500 தலித் குடும்பங்களி புத்த மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளன. நெய்வேலியில் வரும் 23ம்தேதி நடக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் மதத்துக்கு மாறுகிறார்கள்.
இதுகுறித்து குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் கே.நாகராஜ் கூறுகையில், டாக்டர் அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி புத்தமதத்திற்கு மாற தலித் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தலித்துகள் மீதான அடக்குமுறைகளுக்கு முடிவு கட்ட மதம் மாறுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்றார்.
இந்த நிகழ்ச்சியில், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன், புத்ததுறவிகள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications