காம வெறி ராதாகிருஷ்ணனுக்கு ஆண்மை பரிசோதனை
சென்னை:
காம வெறியால் 60க்கும் மேற்பட்ட சிறுமிகளை வேட்டையாடிய சுங்கத் துறை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் இன்றுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்படுகிறார். இதையடுத்து அவருக்கு ஆண்மைத்தன்மை குறித்தபரிசோதனை செய்யப்படவுள்ளது.
60க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளை தனது செக்ஸ் வக்கிரத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட சுங்கத் துறை ஊழல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். காம வெறியாட்டத்தில் ஈடுபட்ட ராதாகிருஷ்ணன்தற்போது சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுக்கவுள்ளனர்.
ஏற்கனவே ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆனந்திக்கு மருத்துவப் பரிசோதனை நடந்து முடிந்துள்ளது. மற்றசிறுமிகளிடமும் மருத்துவப் பரிசோதனை நடக்கவுள்ளது.
பெண் மாஜிஸ்திரேட்டுக்கு கொலை மிரட்டல்:
ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட ஆனந்தி உள்ளிட்ட சிறுமிகளிடம் முன்பு ஒருமுறை புரசைவாக்கம் சிறுவர் சீர்திருத்தகோர்ட்டில் விசாரணை நடந்துள்ளது. அந்த நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 7 பேரில் ஒருவர் பெண். மாஜிஸ்திரேட்டானஅவருக்கு ராதாகிருஷ்ணன் கொலை மிரட்டல் விடுத்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆனால் அதற்குப் பயப்படாத அந்த மாஜிஸ்திரேட், ராதாகிருஷ்ணன் குறித்து விரிவாக விசாரணை நடத்தி போலீஸாரிடம்அறிக்கை கொடுத்துள்ளார். ராதாகிருஷ்ணனின் செக்ஸ் வக்கிரங்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸாருக்கு அது மிக முக்கியமான சாட்சியமாக தற்போது உள்ளது.
சிறுமிகள் சாபம்.. மனைவி வாக்குமூலம்:
இதற்கிடையே ராதாகிருஷ்ணன் மீதான செக்ஸ் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸில் அவரது மனைவி கோமளவல்லி அளித்துள்ள
வாக்குமூலத்தின் முழு விவரம்:
எங்களது குடும்பமும், ராதாகிருஷ்ணனின் குடும்பமும் போலீஸ் குடும்பம். பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 1984ம் ஆண்டுஎங்களது திருமணம் நடந்தது. செக்ஸ் விஷயத்தில் அவர் ரொம்ப மோசமானவர் என்று எனக்கு முதலிலேயே தெரியும். இரண்டுகுழந்தைகள் பிறந்த பிறகும் அவரது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
செக்ஸ் வெறி வந்துவிட்டால் அவருக்கு வயது வித்தியாசமெல்லாம் இரண்டாம் பட்சம் தான். உறவு முறை பற்றிக் கூட அவர்கவலைப்பபட மாட்டார்.
எனது படுக்கையில் அடுத்தவர் மனைவி:
அவருடன் வேலை பார்த்த ஒரு அதிகாரியின் மனைவியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக என்னிடம் பலர் கூறினார்கள். நான்வேலைக்கு போன பிறகு, அந்தப் பெண்ணை வீட்டுக்கே கூட்டி வந்துள்ளதாக பக்கத்து வீட்டினர் பல முறை கூறியுள்ளனர்.
இதை சோதித்து பார்ப்பதற்காக ஒரு நாள், வேலைக்குப் போன நான், மதியம் 1 மணியளவில் திடீரென்று வீட்டுக்கு சென்றேன்.கதவை திறந்த அவர் என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் ஒரு பெண் இருந்தாள். தன்னுடன் வேலை பார்க்கும் அதிகாரியின் மனைவிஎன்றும், வயிற்று வலியால் துடித்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு வீட்டில் படுக்க வைத்திருப்பதாகவும்என்னிடம் நாடகமாடினார்.
ஆனால், அந்தப் பெண்ணோ சிரித்தபடியே நழுவிக் கிடந்த தனது சேலையை சரிசெய்து கொண்டு வெளியேறினாள். இந்தசம்பவம் ஒரு உதாரணம் தான். அவரது காம விளையாட்டுகளுக்கு இன்னும் எத்தனையோ உதாரணங்களை கூறலாம்.
இது தவிர அவருக்கு மேலும் ஒரு கொடூர புத்தி உண்டு. பெண்களிடம் சல்லாபம் செய்வதை ரகசிய கேமரா வைத்து வீடியோபடமாகவும் எடுத்து வைப்பார். பிறகு அவர் தனியாக போட்டுப் பார்த்து ரசிப்பார்.
போலீஸ் உடந்தை:
இவ்வாறு அவர் எடுத்து வைத்திருந்த வீடியோ கேசட்டுகளை நான் போலீஸில் கொடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படிகூறினேன். ஆனால் அவர் போலீஸுக்கு பணம் கொடுத்து சரிகட்டி அந்த வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து விட்டார்.
"உன்னால் என்னை எதுவும் செய்யமுடியாது என்று அவர் மிகவும் எக்காளத்துடன் என்னைப் பார்த்து கூறினார். இனிமேலும்அவரை திருத்த முடியாது என்று கருதி அவரை விட்டுப் பிரிந்து நான் தனியாக வந்துவிட்டேன்.
மொட்டை பெட்டிசன்:
அவரை விட்டுப் பிரிந்து வந்த பிறகு என்னுடைய வேலையை பறிக்க எனக்கு எவ்வளவோ தொல்லைகள் கொடுத்தார்.என்னுடைய உயரதிகாரிகளுக்கு நிறைய மொட்டை கடிதங்கள் எழுதுவார். அவர்களிடம் நேரில் வந்தும் புகார் செய்வார்.
கடைசியாக அவர் என்னை இழிவுபடுத்தி 17 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை சாமிப்படங்களின் முன்வைத்து, "கடவுளே அவருக்கு தண்டனை கொடு என வேண்டி வந்தேன்.
தெய்வத்தின் துணையால் தான் அவரை எதிர்த்து நான் போராடி வந்தேன். பெண்களின் சாபம் சும்மா விடாது என்பார்கள்.என்னை அசிங்கப்படுத்த நினைத்தார். இப்போது அவரே அசிங்கப்பட்டு நிற்கிறார். தெய்வம் அவருக்கு தக்க சமயத்தில் சரியானதண்டனை கொடுத்து விட்டது என்றார்.
ராதாகிருஷ்ணனின் மகன் நவீன் பிளஸ் டூ படிக்கிறார். அவரும் தனது தந்தை செய்த செக்ஸ் லீலைகள் பற்றி போலீஸில்வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications