திமுக பேச்சாளர் மலர்மன்னனை விரட்டிப் பிடித்து கைது செய்த போலீஸ்
ஆலந்தூர்:
ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் திமுக பேச்சாளர் மலர்மன்னனை போலீஸார் விரட்டிச்சென்று கைது செய்தனர்.
சென்னை பழவந்தாங்கல் பகுதியில் மார்ச் 31ம் தேதியன்று திமுக பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய வெற்றிகொண்டான், மலர்மன்னன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் வளர்மதி ஆகியோரைப் பற்றி அவதூறாகவும்,அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக போலீஸ்காரர் ஒருவர், பழவந்தாங்கல் போலீஸில் புகார் செய்தார்.
இந் நிலையில், ஆலந்தூரில் 131வது வார்டு தேர்தலுக்காக திமுக வேட்பாளரை ஆதரித்து மலர்மன்னன் பிரசாரம் செய்து வந்தார்.இதையடுத்து உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று மலர்மன்னனை கைது செய்ய முயன்றனர்.
இந்த வழக்கில் எந்த தகவலும் தெரிவிக்காமல் கைதுசெய்ய முடியாது என்று அங்கு கூடியிருந்த திமுகவினர் கூறினர். இதனால்போலீஸுக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மலர்மன்னன் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றார். இதைப்பார்த்த போலீஸார் அவரை விரட்டிச் சென்று பிடித்துகைது செய்தனர்.
இதற்கிடையே மலர்மன்னனை போலீஸார் அடித்து உதைத்தாக தகவல் பரவியதையடுத்து ஆலந்தூர் நகரசபை தலைவர்ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மலர்மன்னனை தாக்கவில்லை என்று போலீஸார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
பிறகு மலர்மன்னனை போலீஸார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார். பின்னர் அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விரைவில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டானையும் போலீசார் அமுக்குவர் என்று தெரிகிறது.
சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் அதிமுகவினர் கலவரம் செய்ய இருப்பதாகவும், அதைத் தடுக்க மத்திய ரிசர்வ்போலீஸ் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஆளுநரை சந்தித்து திமுகவினர் மனு கொடுத்துள்ளநிலையில், திமுகவினர் மீது போலீசாரை பாய விட்டுள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications