மத்திய அரசை அகற்ற கம்யூனிஸ்டுகளுக்கு ஜெ. அழைப்பு
சென்னை:
மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை கம்யூனிஸ்ட்கட்சிகள் வாபஸ் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில், நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மணி, பாலபாரதிஆகியோர் பேசுகையில், எங்களது கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்துவருகிறது என்று கூறினர்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை பகிரங்கமாக எதிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கூறுகிறது. அதேபோல, அந்த அரசை பகிரங்கமாவும் அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
அரசின் கொள்கைகளை எதிர்ப்பதாக உங்களது கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, ஆட்சிக்குகொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுங்கள். மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போகவேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
இந்த அரசு மக்கள் விரோத அரசு. இந்த அரசை அகற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது எழுந்த, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அகற்ற வேண்டும் என்று முதல்வர்கூறுகிறார். அப்படி அகற்றினால், யார் தலைமையில் மாற்று அரசு அமையும் என்பதை முதல்வரால் கூற முடியுமா? என்று கேட்டார்.
அதற்கு ஜெயலலிதா, முதலில் ஆட்சியை அகற்றுங்கள். மாற்று அரசு குறித்து தானாக வழி பிறக்கும், ஏதாவது ஒரு மாற்று தானாக உருவாகும்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications