நடராஜன் மீதான கார் இறக்குமதி மோசடி வழக்கு: 3 மாதத்தில் முடிக்க சிபிஐக்கு உத்தரவு
சென்னை:
நடராஜன் மீதான அன்னியச் செலாவணி மோசடி வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன், லண்டனில் வசித்த பாலகிருஷ்ணன், அவரது மகன்யோகேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டுகளும் முடக்கி வைக்கப்பட்டன.
லண்டனில் யோகேஷ் பாலகிருஷ்ணன் இந்த காரை ஒரு வருடமாக பயன்படுத்தியதாக சுங்கத்துறையிடம் தெரிவித்திருந்தனர். ஆனால்,அது பொய்யான தகவல் என்று கூறப்பட்டது.
இவர்களில் பாலகிருஷ்ணன் என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் முடக்கி வைக்கப்பட்ட தனது பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரி, யோகேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம் மனு நீதிபதி சிங்காரவேலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது என்று சிபிஐ தரப்புவழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார்.
அதற்கு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருப்பதால் விசாரணை தாமதமாகிறது என்று சிபிஐ தரப்புவழக்கறிஞர் கூறினார்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணன் மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரிக்கும்படியும், இந்த வழக்குவிசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்கும் படியும் சிபிஐ நீதிமன்றத்திற்கு நீதிபதி சிங்காரவேலு உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications