சொத்துக் குவிப்பு: மாஜி அதிமுக அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜனார்த்தனத்துக்கு கடலூர் நீதிமன்றம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்துள்ளது.

கடந்த 1991-96ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இலவச செருப்பில் ஆரம்பித்து சுடுகாட்டு கொட்டகை போடுவது வரை பல்வேறுதிட்டங்களில் பெரும் ஊழல்கள் நடந்தன.

அப்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்தனன். இவர் மீதும், இவரது மனைவி பிரேமா மீதும் வருமானத்திற்கு அதிகமாகரூ. 50 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இவர் மீதும், இவரது மனைவி மீதும்லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 2 மாதங்களுக்கு முன் விசாரணை முடிந்து தீர்ப்புஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் ஜனார்தனம் தனது அதிகாரத்தைப் தவறாகப் பயன்படுத்தி சொத்து குவித்தது நிரூபணமாகியுள்ளதாகக் கூறிய நீதிபதி பூதநாதன்,அவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில்தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஜனார்தனத்தின் மனைவியை இந்த வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தண்டனையை எதிர்த்து 1 மாதத்திற்குள் ஜனார்தனம் மேல் முறையீடு செய்யலாம் என்றும் அதுவரை தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+