நடிகை மோகினியின் தந்தைக்கு கத்திக்குத்து
சென்னை:
நடிகை மோகினியின் தந்தை கத்தியால் குத்தப்பட்டார். குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மோகினியின் தந்தை வி.ஆர்.சீனிவாசன், சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்பின் துணை செயலாளராக இருந்து வருகிறார். இந்தகிளப்பில் துரைப்பாக்கத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் சர்வராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3 வருடங்களுக்கு முன் இவர், வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதன் பிறகு ரேஸ் கோர்ஸ் கிளப்பிலிருந்து ஜெயசீலன்தனது செட்டில்மென்ட் பணத்தை பெற்றுவிட்டார்.
பி.எப்.பணம் மட்டும் அவர் வாங்க வேண்டியிருந்தது. இதற்காக நேற்று அவர் ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சென்றார். மோகினியின் தந்தைசீனிவாசனிடம் சென்று தனக்கு பி.எப். பணத்தை விரைவில் பெற ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
அதற்கு அவர், போர்டு மீட்டிங்கில் வைத்து எல்லா உறுப்பினர்களிடமும் அனுமதி பெற்ற பிறகே பணம் பெற முடியும் என்று கூறியுள்ளார்.ஆனால் தனக்கு உடனடியாக பணம் வேண்டும் என்று ஜெயசீலன் கூறியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், ஜெயசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications