திருமாவளவனை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்ததற்கு தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு பேருந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை பிரகடனப்படுத்தப்பட்ட தலைமறைவுக்குற்றவாளியாக திட்டக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவித்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திட்டக்குடி அருகே உள்ள கோட்டுக்குட்டை என்ற பகுதியில் கடந்த 1999ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில்போராட்டம் நடந்தது. அப்போது அரசுப் பேருந்து சேதப்படுத்தப்பட்டது.

இதையடுத்து பெண்ணாடம் போலீஸார் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக திட்டக்குடிமாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவரை தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.இதை எதிர்த்து திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், தனக்கும் கோட்டுக்குட்டை பஸ் சேத சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்போது நான் சிதம்பரத்தில தேர்தல் பிரசாரத்தில்ஈடுபட்டிருந்தேன். இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டிலிருந்து ஒரு முறை கூட சம்மன் வரவில்லை. எனது நன்மதிப்பை களங்கப்படுத்தும்விதத்தில் இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக என்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், திட்டக்குடி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+