தஞ்சையில் இன்று திமுக இரண்டாம் நாள் மாநாடு
தஞ்சாவூர்:
![]() |
தஞ்சாவூர் திமுக மாநாட்டில் 2ம் நாள் மாநாடு ஆரூர் செந்தமிழன் கலைநிகழ்ச்சியுடன் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
தஞ்சாவூர் -புதுக்கோட்டை சாலையில் மேலவஸ்தா சாவடி என்ற இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான திடலில் திமுகமண்டல மாநாடு நேற்று நாகூர் ஹனீபா இசைக் கச்சேரியுடன் தொடங்கியது.
பல நூறு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இம்மாநாட்டுக்கு திடல் உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் என பெயர்சூட்டப்பட்டுள்ள இத் திடலில் பந்தல் 4.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1,25,000 பேர் அமரும் வகையில் மாபெரும் பந்தல்அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுத் திடலின் வெளியில் பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு இணையாக ஸ்டாலினுக்கும் கட்-அவுட்டுகள்வைக்கப்பட்டுள்ளன. மேடையிலும் ஸ்டாலினின் படம் வரையப்பட்டுள்ளது.
![]() |
ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகப் பேசிவிடக் கூடாது என்பதற்காக கூடவே பேராசிரியர் அன்பழகனின்கட்அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுப் பந்தலில் இரண்டு முகப்புத் தோற்றங்கள் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு முகப்புத் தோற்றம்அரண்மனை போன்றும், மற்றொரு முகப்புத் தோற்றம் கிரேக்க நாட்டு அரண்மனை போன்றும் அமைக்கப்பட்டுள்ளன.
பந்தலின் உட்புறம் முழுவதும் பிளாஸ்டிக் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டிருந்த 82 அடி உயர கொடிக்கம்பத்தில் கவிஞர் நிர்மலா சுரேஷ். கொடியேற்றி வைத்தார்.மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மேள தாளம், கரகாட்டம், தப்பாட்டத்துடன் வரவேற்புஅளிக்கப்பட்டது.
பின்னர் 10.30 மணியளவில் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கோ.சி.மணி வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து 10.45மணியளவில் மாநாட்டை திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைத்துப் பேசினார்.
மாலை 4 மணிக்கு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. பொதுச்செயலாளர் அன்பழகன் இரவு நிறைவுரையாற்றினார்.
2வது நாளான இன்று காலை 9 மணியளவில் ஆரூர் செந்தமிழன் கலை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது.
இதன் பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து துணை பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மாலை 5மணியளவில் தோழமைக் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்குகின்றனர். ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், வைகோ, வரதராஜன்,நல்லக்கண்ணு உட்பட பலர் பேசுகின்றனர்.
இறுதியாக இரவு 8 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications