காஞ்சி, கும்மிடிப்பூண்டி: வேட்பு மனுதாக்கல் தொடங்கியது
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி அதிமுக உறுப்பினர்கள் மரணமடைந்ததையொட்டி அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 25ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.26ம் தேதி மனுக்கள்பரிசீலிக்கப்படும். வாபஸ் பெற கடைசி நாள் 28ம் தேதியாகும். மே 14ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதேபோல, கும்மிடிப்பூண்டி தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக துணை கலெக்டர் பிச்சம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் இடைத் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மாலை 3 மணி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், தேர்தல் ஆணைய விதிகளை மீறும் வகையில் அதிக வாகனங்கள், அதிகஆட்களுடன் வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்சிகள் தீவிரம்:
வேட்பாளர்களை அறிவிக்க திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட 16 பேரும், கும்மிடிப்பூண்டியில் 10 பேரும் தலைமைக்கழகத்தில்விண்ணப்பித்துள்ளனர்.
இவற்றை பரிசீலித்து வேட்பாளரை இன்னும் ஓரிரு தினங்களில் ஜெயலலிதா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுககூட்டணிக்கட்சியினர் நாளை கூடி ஆலோசனை நடத்துகின்றனர். எனவே இரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களைதிமுகவும் இன்னும் ஒரு சில தினங்களில் அறிவித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கிய உடனேயே இந்த இரு தொகுதிகளிலும் சுவர்களில் விளம்பரம் செய்ய திமுக, அதிமுககட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இப்போதே இரு கட்சியினரும் சுவர்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications