கோவை குண்டு வெடிப்பு கைதிகள் தற்கொலை முயற்சி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை தொடர் குண்டுவெடிப்புக் கைதிகள் 5 பேர் கொசு வர்த்தி சுருள் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளைவிழுங்கி தற்கொலை செய்ய முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கைதான நூற்றுக்கணக்கான கைதிகள் சென்னை மற்றும் கோவை நீதிமன்றத்தில்அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுவழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கைதிகள் பலர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு நீதிபதி, சட்டப்படிதான் வழக்கு விசாரணை நடைபெறும். அவசரப்பட்டு வேகம் வேகமாக வழக்கை முடிக்க முடியாதுஎன்று தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் உபைதுர் ரஹ்மான், சிக்கந்தர், அபுதாலிப், யாகூப் உள்ளிட்ட 5 கைதிகளும், நாங்கள் ஐந்து பேரும் கொசுவர்த்தி சுருளை பொடித்து விழுங்கியுள்ளோம். அதேபோல, குறைந்த ரத்த அழுத்த்திற்கான மாத்திரைகளையும்விழுங்கியுள்ளோம். இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் இறந்து விடுவோம். அதன் பிறகாவது வழக்கை விரைவாக முடியுங்கள்என்று கூறினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஐந்து பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஐந்து பேரும் கோவை அரசு பொது மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள்தெரிவித்துள்ளனர். கைதிகளின் இந்தச் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+