மரியாதை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி: டி.ராஜேந்தர்
மதுரை:
எங்களது கட்சிக்கும், எங்களுக்கும் மரியாதை கொடுக்கும் கட்சியுடன் சட்டசபை இடைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளஇலட்சிய திமுக தயார் என்று அக்கட்சியின் தலைவரும், இயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் ராஜேந்தர் பேசுகையில், தீவிர அரசியலில் நான் தற்போது ஈடுபட்டுள்ளேன். திமுகவை வீழ்த்தவேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்காகப் பிறந்ததுதான் லட்சிய திமுக.
திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் தயாராகவே உள்ளோம்.
திமுக தனது தனித்தன்மையை, அடையாளத்தை இழந்து விட்டது. திமுக நடத்தி வரும் மண்டல மாநாடுகளைப் பார்க்கும்போது,அது திமுக மாநாடா அல்லது கூட்டணிக் கட்சிகளின் மாநாடா என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது.
ஆனால் அதிமுகவின் நிலை அப்படியில்லை. தனியாக இருந்தாலும் சக்தி வாய்ந்த கட்சியாக விளங்குகிறது அதிமுக.
என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு, திமுகவில் இரண்டாவது முறை போய்ச் சேர்ந்ததுதான். ஆனால் அந்தத் தவறுமீண்டும் நடக்காது. திமுகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில் நான் சாணக்கியனாக இருப்பேன்.
கருணாநிதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஒரு காலத்தில் அவரை எனது தலைவராக ஏற்றுக் கொண்டவன்.கொள்கை ரீதியாக அவரை எதிர்ப்பது வேறு, களத்தில் இறங்குவது வேறு. எனவே கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடமாட்டேன் என்றார் ராஜேந்தர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications