புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம் வாபஸ்!
சென்னை:
புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் பல ஆண்டுகளாக உள்ள குடிநீர்பிரச்சினையை போக்க எனது தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும் கடந்த அக்டோபர் முதல் சென்னை நகரில் குழாய் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டது.
சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க புதிய வீராணம் திட்டம், கிருஷ்ணா நீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ஆகியவற்றுக்கு எனது அரசு முன்னுரிமை கொடுத்தது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த 1 ஆண்டு ஆகும். எனவே இந்த ஆண்டும் கோடையில் குடிநீர்ப் பிரச்சினைஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
பல்வேறு நிபுணர்களின் தீவிர ஆய்வுக்குப் பின்னர் இத்திட்டம் செயல்படுத்த உகந்தது என கண்டறிந்த பின்னரே இத்திட்டத்தைசெயல்படுத்த முடிவு செய்தோம்.
இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எந்த வித ஐயப்பாடும் இருக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு விளக்கக் கூட்டங்களுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டது. நிலத்தடி நீர் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.75கோடி செலவில் 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
உயர்நீதிமன்றம் தள்ளுபடி:
இருப்பினும் ஒரு சில விவசாயிகள் பல்வேறு தூண்டுதல்களின் காரணமாக இத்திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். ஆனால் திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்த உயர்நீதிமன்றம், அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.
மக்களுக்கு நலன் பயக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என தீர்ப்பளித்தது.
இருப்பினும் விவசாயிகளிடையே கிஞ்சித்தும் கவலை, அச்சம் இருக்கக்கூடாது என்பதற்காகவும், விவசாயிகளின் கோரிக்கையைஏற்றும் "மக்கள் குரலே மகேசன் குரல் என்பதற்கு ஏற்பவும் புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் எனஆணையிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications