சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை: கார் எரிப்பு!
சென்னை:
![]() |
| மாநகராட்சி தேர்தலில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதைக் கண்டித்து ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி மற்றும் ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். |
சென்னை மாநகராட்சி வார்டு எண் 110 மற்றும் 131 ஆகியவற்றுக்கு இன்று காலை 7.30 மணியளவில் வாக்குப் பதிவுதொடங்கியது. காலை 9 மணி வரை ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாக்குப் பதிவு நடந்தது.
9 மணிக்கு மேல் 110வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் வன்முறை வெடித்தது.
அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீஸார் தடியடிநடத்தி இரு தரப்பினரையும் கலைத்தனர்.
ஆனால் அதற்குப் பிறகு பெரும் வன்முறை வெடித்தது. திமுகவினரும், அதிமுகவினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அங்கு கூடியிருந்த வாக்காளர்கள், பத்திரிக்கையாளர்கள், கேமராமேன்கள் ஆகியோரையும் ஒரு கும்பல்சரமாரியாகத் தாக்கியது. இதில் பலர் காயமடைந்தனர்.
வன்முறையை படம் பிடிக்க முயன்ற சன் டிவி மற்றும் ஜெயா டிவியின் கேமராமேன்களும் தாக்கப்பட்டனர். இதில் சன் டிவிகேமராமேன் கையில் வைத்திருந்த கேமராவை ஒரு கும்பல் பிடுங்கிச் சென்றது.
காருக்கு தீவைப்பு:
வன்முறைக் கும்பல், அதிமுக கவுன்சிலர் ஒருவரின் குவாலிஸ் காருக்குத் தீவைத்ததால் அங்கு பதட்டம் அதிகரித்தது.தீவைத்ததில் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
![]() |
வன்முறை குறித்துத் தகவல் அறிந்தவுடன் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின்,எம்.எல்.ஏக்கள் புரசை ரங்கநாதன், பரிதி இளம்வழுதி, எஸ்.ஏ.எம்.உசேன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மற்றொரு திமுக எம்.எல்.ஏ.ஜே.அன்பழகன் தலைமையில் திமுகவினர் ஆயிரம் விளக்குக் காவல் நிலையம் முன்பாகபோராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே திமுகவினரின் வன்முறைச் செயல்களைக் கண்டித்து நிதியமைச்சர் பொன்னையன் தலைமையில் அதிமுகவினர்சாலை மறியல் செய்தனர்.
அமைச்சர்கள் கைது:
![]() |
இதேபோல, அமைச்சர்கள் வளர்மதி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அதிமுக கவுன்சிலரின் கார் தீவைத்துக் கொளுத்தப்பட்டதைக்கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்மதி மற்றும் தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஆதி ராஜாராம்ஆகியோரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஒயிட்ஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அமைச்சர்கள் கருப்பசாமி, மில்லர், வைத்தியலிங்கம், அனிதா ராதாகிருஷ்ணன்,ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திமுக மற்றும் அதிமுகவினரின் இந்தப் போராட்டம் காரணமாக அண்ணா சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் சாலையில் காய நேர்ந்தது. நூற்றுக்கணக்கான வாகனங்கள்எங்கும் போக முடியாமல் தேங்கிக் கிடந்தன.
திமுக மற்றும் அதிமுகவினரின் இந்த வன்முறை மற்றும் போராட்டங்களால் பொதுமக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications