வரி ஏய்ப்பு: நடராஜன் மீது குற்றச் சாட்டுப் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 1 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன் மீதுசென்னை சிபிஐ தனி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லக்ஸஸ் காரை நடராஜன் வாங்கினார். ரூ. 1 கோடி மதிப்புள்ள இந்தப் புதிய காரை,பழைய கார் என்று சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளை மேலாளர் சுஜித்ரா என்பவர் போலியான சான்றிதழ்கொடுத்தார். இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நடராஜன், உதவியாளர் பாஸ்கரன், லோகேஷ், பாலகிருஷ்ணன், சுஜித்ரா ஆகியோர் மீது சிபிஐவழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில் பாலகிருஷ்ணனைத் தவிர மற்றவர்களை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ஆனால் பாலகிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார். இதனால் வழக்கு விசாரணை தாமதமடைந்து வந்தது.

இதையடுத்து லோகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் பாலகிருஷ்ணா சம்பந்தப்பட்ட வழக்கைதனியாகப் பிரித்து, நாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கை தனியாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை ஏற்ற நீதிபதி சிங்காரவேலு, இந்த வழக்கை இரண்டாகப் பிரிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கு இரண்டாகப்பிரிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் நடராஜன், பாஸ்கரன், லோகேஷ், சுஜித்ரா ஆகிய நான்கு பேரும்ஆஜராகினர். அப்போது இவர்கள் நான்கு பேர் மீதும் குற்றச்சாட்டுக்களை நீதிபதி ரவீந்திரன் பதிவு செய்தார். இதையடுத்து வழக்குவிசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

26ம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+