குண்டர் சட்டத்தில் கைதாகிறார் ராதாகிருஷ்ணன்!
சென்னை:
சிறுமிகளை பாலியல் ரீதியாக சீரழித்த சுங்கத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
20க்கும் மேற்பட்ட சிறுமிகளை தத்தெடுப்பதாக கூறி பாலியல் ரீதியாக சீரழித்த காம வெறியன் ராதாகிருஷ்ணன் தற்போது போலீஸ்பிடியில் உள்ளார். ஆனந்தி என்ற சிறுமி கொடுத்த புகாரின் பேரில் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில்,ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் கீழ் தற்போது ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு சென்னை மத்திய சிறையில் உள்ளராதாகிருஷ்ணனிடம் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
இதற்கிடையே, குண்டர் சட்டத்தின் கீழும் ராதாகிருஷ்ணனைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட மேலும் சிலரிடமிருந்து புகார் வந்துள்ளதாகவும், அந்தப் புகார்களை பெற்ற பின்னர் குண்டர்சட்டத்தில் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications