மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், பட்டாபிஷேக விழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றானமீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மதுரைக்கு அரசியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டம் சூட்டும் இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அதற்கு அடுத்த நாள் தேரோட்டம்நடைபெறும். அதன் பின்னர் சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி 24ம்தேதி காலை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications