குஜராத்தில் ரயில்கள் மோதல்: 20 பேர் பலி
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை, நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 20பேர்பலியானார்கள். இந்த விபத்திற்கு ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவே காரணம் என்று தெரியவந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3.20மணியளவில் குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்தில் உள்ள சால்வியா என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது.
இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர், அவரது உதவியாளர் உட்பட 20பேர் பலியானார்கள். விபத்து நடந்த இடத்தில்மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள்அனைவரும் வதோரா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தை ரயில்வே அமைச்சர் லாலு பிரஸாத், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அம்மாநில அமைச்சர்கள்ரயில்வே உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த விபத்து குறித்து குஜராத் முதல்வர் மோடி கூறுகையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்.விபத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வதோரா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற பயணிகளை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
ஊழியர்களின் கவனக்குறைவு:
விபத்து குறித்து ரயில்வே போர்டு தலைவர் எஸ்.கே.சிங் கூறுகையில், விபத்தில் 15 பயணிகள் இறந்திருக்கலாம் என்றார்.
இதற்கிடையே இந்த விபத்துக்கு ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதற்குகாரணமான 2 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் லாலுஅறிவித்துள்ளார்.
விபத்து குறித்து தகவல்களை அறிய அகமதாபாத்தில் 079- 22112503 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications