இடைத்தேர்தலுக்கு துணை ராணுவம்: தேர்தல் அதிகாரி
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளுக்கு துணை நிலை ராணுவத்தை பயன்படுத்துவதுகுறித்து பரிசீலிக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளில் மே 14ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல்நேற்றுடன் முடிவடைந்தது. காஞ்சிபுரத்தில் 27 பேரும், கும்மிடிப்பூண்டியில் 22 பேரும் மனு செய்துள்ளனர்.
மே 14ம் தேதி இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 1.93 லட்சம்வாக்காளர்களும், காஞ்சிபுரம் தொகுதியில் மொத்தம் 2.36 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை காவல் துறை மேற்கொள்ளும். அதே சமயத்தில் வாக்காளர்கள் அச்சமின்றிவாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக துணை நிலை ராணுவத்தினர் தேர்தல்நடைபெறும் மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது துணை நிலை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதைப் போலதமிழக இடைத்தேர்தலிலும் ஈடுபடுத்தும் திட்டம் உள்ளது. ஆனாலும் இது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் தான்முடிவெடுக்கும்.
தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வீடியோ மூலம் படம்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவி நடைபெற்ற முறைகளை அறிந்து கொள்ள முடியும்.
அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு எத்தகைய அடையாள அட்டைகளை அங்கீகரிப்பது என்பதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்.
இவ்விரு தொகுதிகளிலும் அந்தந்த பகுதிகளில் வசிக்காதவர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் நுழைவதற்குஅனுமதி மறுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மே 16ம் தேதி நடைபெறும்.
ஒரு வாக்குச் சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த இரண்டு பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்களைத் தவிர மத்திய அரசு ஊழியர்களையும் தேர்தல் பணியில்ஈடுபடுத்தவுள்ளோம்.
இரு தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கும்மிடிப்பூண்டியைப் பொருத்தவரை 864தேர்தல் பணியாளர்களும், காஞ்சிபுரத்தில் 1036 தேர்தல் பணியாளர்களும் தேவைப்படுவார்கள்.
காஞ்சிபுரம் எஸ்.பியாக இருந்த பிரேம்குமார் கடந்த 2004ல் நடந்த மக்களவை பொதுத் தேர்தலின்போது அதிமுகவுக்குஆதரவாக செயல்பட்டதாக புகார் உள்ளது. அந்தப் புகார் இடையில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின்உத்தரவின் பேரில் அந்த வழக்கு மறுபடியும் விசாரிக்கப்படவுள்ளது.
இப்போது பிரேம்குமார் காஞ்சிபுரத்தில் பணியாற்றவில்லை. எனவே இது தேர்தல் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்நரேஷ் குப்தா.
2004ம் ஆண்டு தூத்துக்குடியில், தமிழக கடலோரக் காவல் படையில் எஸ்.பியாக இருந்து வந்தார் பிரேம்குமார். அந்த சமயத்தில்,மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்தப் புகாரைவிசாரிக்குமாறு தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தொடக்கத்தில் நடந்து வந்த விசாரைண பின்னர் கைவிடப்பட்டது பிரேம்குமார் மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.பின்னர் கடலூருக்கும் அதன் பின்னர் காஞ்சிபுரத்திற்கும் இவர் மாற்றப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications