கட்டண பாக்கி: மாணவர்களை சிறை வைத்த பள்ளி நிர்வாகம்!
மதுரை:
ரூ. 1.5 லட்சம் கட்டணப் பாக்கியை செலுத்தாததால் 2 மாணவர்களை பள்ளியில் சிறை வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில்,சம்பந்தப்பட்ட 2 மாணவர்கைளயும் விடுவிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் சாஸ்திர நகரைச் சேர்ந்தவர் எபனேசர் பிரபு. இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், ஹேபியஸ் கார்பஸ் மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், எனக்கு டேவிட் கிறிஸ்டோபர் (வயது 12), பிரவீண் (வயது 8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இவர்களின் ஆண்டுத் தேர்வு கடந்த 14ம் தேதியுடன் முடிந்தது. அதன் பிறகு பள்ளி விடுமுறை விடப்பட்டது. தேர்வு முடிந்தபின்னர் மாணவர்களை அவர்களது பெற்றோருடன் பள்ளி நிர்வாகம் அனுப்பி வைக்கும்.
ஆனால் எங்களது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக எனது மனைவி சென்றபோது பள்ளிக் கட்டணம் ரூ ஒன்றரைலட்சத்தை செலுத்தினால்தான் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியும் என்று பள்ளி தாளாளர் சாம் பாபு கூறி, குழந்தைகளைஅனுப்ப மறுத்து விட்டார்.
இரு குழந்தைகளும் பள்ளியிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எனது குழந்தைகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்றுஎபனேசர் பிரபு தனதுமனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது சம்பந்தப்பட்ட இரு மாணவர்களையும் கொடைக்கானல் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பள்ளி தாளாளர்சாம் பாபுவும் நேரில் ஆஜரானார்.
சாம்பாபுவின் வழக்கறிஞர் கூறுகையில், குழந்தைகளை பள்ளியில் அடைத்து வைக்கவில்லை. குழந்தைகளின் தாயார்தான்அவர்களை அழைத்துச் செல்ல மாட்டேன் என்று கூறி தகராறு செய்தார். அவர்களை விடுவிப்பதில் எங்களுக்கு எந்தஆட்சேபனையும் இல்லை என்றார்.
இதையடுத்து இரு மாணவர்களையும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications