சென்னையில் திருமணத்தை நிறுத்திய குடிப் பழக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்ததால், கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண். இந்தசம்பவம் சென்னையில் பரபரப்பாக பேசப்படுகிறது.

"குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். சென்னையில் ஒரு திருமணத்தையே குடிப் பழக்கம் நிறுத்தி விட்டது. அசோக் நகரைச்சேர்ந்தவர் ஷேக் சர்தார். இவரது மகள் தில்சாத் பானுவுக்கும், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த அமானுல்லாஎன்பவன் மகன் கரீமுல்லாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு சமூக நலக் கூடத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தையொட்டி இருவீட்டையும் சேர்ந்த உறவினர்கள் முந்தைய நாளே கல்யாண மண்டபத்தில் கூடியிருந்தனர்

அன்று இரவு தனது நண்பர்களுக்கு கல்யாண மண்டபத்தில் தனது அறையில் கரீமுல்லா மது விருந்து அளித்தார். அப்போதுகரீமுல்லாவும் மது அருந்தியுள்ளார். இந்தத் தகவல் பெண் வீட்டாருக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து திருமணத்தன்று காலையில் பெண் வீட்டார் கொந்தளித்தனர். குடிப்பழக்கம் உடைய மாப்பிள்ளை எனக்குவேண்டாம் என்று மணமகள் தில்சாத் பானு கூறி விட்டார். அதேபோல, தாயில்லாத பெண்ணை குடிப்பழக்கம் உடையவருக்குக்கொடுக்க மாட்டேன் என்று அவரது தந்தையும் கூறி விட்டார்.

இதனால் இரு வீட்டாருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றியது. போலீஸாருக்குத் தகவல் சென்றது. போலீஸார் விரைந்து வந்துமணப் பெண் வீட்டாரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் முடிவில் அவர்கள் திட்டவட்டமாக இருந்ததால் போலீஸார்திரும்பிச் சென்று விட்டனர். இதனால் கல்யாணம் நடைபெறாமல் நின்று போனது.

இந் நிலையில் மணந்தால் தில்சாத்தைத் தான் மணப்பேன். எனக்கு குடிப்பழக்கம் இருப்பது அவர்களது குடும்பத்திற்கு முன்பேதெரியும். தெரிந்துதான் பெண் கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். தில்சாத் எனக்குக் கிடைக்கும் வரை காத்திருப்பேன் என்றுமணமகன் கரீமுல்லா கூறி வருகிறார்.

குடி திருமணத்தையும் நிறுத்தும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+