தமிழக கடல்களில் ராட்சத அலைகள் நீடிப்பு; மக்கள் பீதி
சென்னை:
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர நகரங்களில் கடல் கொந்தளிப்பாகவும், ராட்சத அலைகள் வந்தவண்ணம்இருப்பதாலும் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர். கடல் அதிககொந்தளிப்பாகவும், ராட்சத அலைகள் வந்தவண்ணம் இருப்பதாலும் இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், இனிகோ நகர் என்ற பகுதியில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அலறி அடித்து ஓடினர். இதேபோல,திருச்செந்தூரிலும் கடல் மட்டம் உயர்ந்து பெரும் அலைகள் அடித்தன.
இதேபோல, சென்னையில் மெரினா கடற்கரையில், கடல் நீர் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. மேலும் அதிக அளவில்அலைகளும் வந்ததால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். 2 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக அலைகள்எழுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதே போன்ற கடல் கொந்தளிப்பு கல்பாக்கம், நாகப்பட்டனம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் காணப்பட்டது.
பருவநிலையில் மாற்றம் ஏற்படும்போது இதுபோன்று கடல் கொந்தளிப்பு ஏற்படுவது சாதாரண விஷயம்தான் என்று நிபுணர்கள்கூறுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications