புதிய விமான நிலையம்: நாங்கள் தான் காரணம்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உலகத் தரம் வாய்ந்த புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கைவிடுத்தது கடந்த திமுக ஆட்சியில்தான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய உலகத் தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையத்தை அமைக்க பிரதமர்மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல்,முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங், பிரபுல் படேல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தான்சென்னையில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதல்வர் என்ற வகையில் நான் கோரிக்கை விடுத்தேன்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்ததும், நானும், 40 தமிழகஎம்.பிக்களும் இதுதொடர்பாக பிரதமருக்கு கோரிக்கை விடுத்தோம்.

எங்களது கோரிக்கையை ஏற்று தற்போது புதிய விமான நிலையம் அமைக்க பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்காகஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+