தலைமைச் செயலாளராக நாராயணன் நியமனம்
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக என். நாராயணன் பதவியேற்றுக் கொண்டார்.
தலைமைச் செயலாளராக இருந்து வந்த லட்சுமி பிரானேஷ் வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதியத் தலைமைச் செயலாளராக, தற்போது நிதித்துறை செயலாளராகவும், வளர்ச்சித் துறை ஆணையராகவும் இருந்து வரும் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலையே நாராயணன் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார் லட்சுமி பிரானேஷ்.
தனது 22வது வயதிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனவர் நாராயணன். நினைவாற்றலில் சிறந்தவர் என்பதால், சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் மனித கம்ப்யூட்டர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர் நாராயணன்.
நாராயணன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நிதித்துறைச் செயலாளராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளராகவும் இருந்து வந்தார்.
ஞானதேசிகன் வகித்து வந்த பொறுப்புகளுக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications