கும்மிடிப்பூண்டி: வைகோ, ப.சி, இளங்கோவன், சரத்குமார் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி தொகுதியில் திஞிஞ்க சார்பில் போட்டியிடும் வெங்கடாசலபதிக்கு ஆதரவாக இன்று முதல் திமுக கூட்டணியைச்சேர்ந்த தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது பிரசாரத்தை இன்று மாலை 4 மணியளவில் தொடங்குகிறார். கன்னிகைப்பேர் என்றஇடத்தில் பிரசாரத்தைத் தொடங்கும் வைகோ மாதர்பாக்கத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்துடன் முடிக்கிறார்.

தொடர்ந்து, 5ம் தேதி, 8ம் தேதி ஆகிய நாட்களிலும் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வைகோ பிரசாரம்செய்யவுள்ளார்.

நடிகர் சரத்குமார் 4ம் தேதி மாலை 3 மணியளவில் தனது பிரசாரத்தை வாணியஞ்சத்திரம் என்ற இடத்தில் தொடங்குகிறார். 2நாட்களுக்கு அவர் இத்தொகுதியில் தீவிர பிரசாரம் செய்கிறார்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 6ம் தேதி இரவு 7 மணியளவில் பெரியபாளையம் பொதுக் கூட்டத்திலும், 9 மணியளவில்கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 7ம் தேதி கன்னிகைப்பேரில் தொடங்கி இரவு 9 மணியளவில் கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்தைமுடிக்கிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் சிதம்பரம் பேசுகிறார்.

8ம் தேதி மத்திய அமைச்சர் இளங்கோவன் பிரசாரம் மேற்கொள்கிறார். வெங்கல் மற்றும் ஊத்துக் கோட்டை பொதுக் கூட்டங்களில்அவர் பேசுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+