கீரிப்பட்டி: பஞ். தலைவர் ராஜினாமாவை ஏற்க தடை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் அழகுமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்க அரசை அனுமதிக்கக் கூடாது என்று கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி உள்ளாட்சி இடைத் தேர்தல் நடந்தது. இதில் கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கும்தேர்தல் நடந்தது.

இந்தத் தேர்தலில் ஊர் மக்கள் சார்பில், அதாவது முக்குலத்தோர் சமுதாயத்தினரின் சார்பில், நிறுத்தப்பட்ட தலித் வேட்பாளரானஅழகுமலை என்பவர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் பதவி விலக வேண்டும் என்ற கண்டிசனுடன் தான் இவரை அவர்கள்நிறுத்தினர்.

இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகப் பதவியேற்ற அவர், முக்குலத்தோர் சமூகத்தினரின் உத்தரவுப்படி,உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். இந்தக் கடிதம் மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசீலனையில்உள்ளது.

இந்த ராஜினாமா விளையாட்டு பல ஆண்டுகளாக இந்த ஊரில் நடந்து வருகிறது. தலித்தை தங்களது பஞ்சாயத்துத் தலைவராகஏற்க முடியாது என முக்குலத்தோர் சமூக மக்களின் வாதமாக இருந்து வருகிறது.

இந் நிலையில், அழகுமலையை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பூங்கொடிசென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கீரிப்பட்டி பஞ்சாயத்துக்கு கடந்த 9 வருடங்களில் 19 முறை தேர்தல் நடந்துள்ளது. இருப்பினும் இதுவரை கீரிப்பட்டிக்குமக்கள் பிரதிநிதி என்று யாருமே இல்லாத அவல நிலை நிலவுகிறது.

தற்போது நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அழகுமலை, மக்களுக்குப் பணி செய்வேன் என்று உறுதி அளித்துவிட்டுத்தான் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் அந்த உறுதிமொழியை புறக்கணித்து விட்டு உடனடியாக விலகுவதுஅவரது கடமையை மறுக்கும் செயலாகும்.

இதனால் அழகுமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்க அரசை அனுமதிக்கக் கூடாது. கீரிப்பட்டிக்கு சிறப்பு அதிகாரி யாரையும்நியமிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பூங்கொடி.

இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+