கே.ஜே. ராவிடம் திமுக புகார் மனு
சென்னை:
இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக பெருமளவில் முறைகேடுகள் செய்யத் திட்டமிட்டுள்ளதால் தேர்தல் ஆணையம் அதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் கே.ஜே.ராவிடம் புகார் மனுகொடுக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் விடுதலை விரும்பி, இளங்கோவன் ஆகியோர் சிறப்புப் பார்வையாளர் ராவை சந்தித்து இதுதொடர்பாக கொடுத்த மனுவில்,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலிலிருந்து பெருவாரியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன.அதேபோன்ற செயலில் ஆளுங்கட்சியினர் இந்தத் தேர்தலிலும் ஈடுபடலாம்.
எனவே வன்முறைச் சம்பவங்களின் மூலம் ஆளுங்கட்சியினர் பலனடைந்து விட தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது.
தேர்தல் பணிகளில் அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
மனுவில் கூறப்பட்டுள்ள புகார்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதைஆராய்ந்து பார்த்த பின்பே, தமிழகத்தை விட்டு தான் செல்லப் போவதாகவும் ராவ் திமுக குழுவிடம் உறுதிமொழி அளித்தார்.
இதேபோல, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சைரன் பொருத்திய காரில், சுழல் விளக்கு சுழல, துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன்வாக்கு சேகரிக்க வருவதால் பொது மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் ஒரு புகாரும் ராவிடம் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே, இன்று காலை திருவள்ளூர் சென்ற ராவ், அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளுடன் கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கும்மிடிப்பூண்டிக்கு சென்ற ராவ் அங்கு தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக தோரணங்களையும் வளைவுகளையும் தூக்கச் சொன்னார் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications