அதிமுக பேனர்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில், முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்யும்இடங்களில், விதிமுறைகளுக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருந்தபேனர்கள், தட்டிகள், தோரணங்களை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு, தேர்தல் சிறப்பு பார்வையாளர் கே.ஜே.ராவ் உத்தரவிட்டார்.
இடைத் தேர்தல் நடக்கவுள்ள காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டிதொகுதிகளில் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக தேர்தல்கமிஷனுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து இதன்படி துணைக் கமிஷனர் அந்தஸ்திலுள்ள கே.ஜே.ராவை சிறப்புப்பார்வையாளராக தேர்தல் கமிஷன் அனுப்பி வைத்துள்ளது.
நேற்று காலை சென்னை வந்த அவர் உடனடியாக காஞ்சிபுரம் புறப்பட்டு சென்றார்.
அங்கு அவர் கொட்டும் மழையில் தொகுதி முழுவதும் சுற்றிப் பார்த்தார். தேர்தல் பிரசாரங்கள். சுவரொட்டிகள், தட்டி போர்டுகள்,பேனர்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
இது தவிர தேர்தலுக்காக திடீரென போடப்பட்ட புதிய ரோடுகள், திடீரென முளைத்த குடிநீர்க் குழாய்கள் ஆகியவை குறித்தும்அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்து கொண்டார்.
மேலும் முதல்வரை வரவேற்று கட்டப்பட்டிருந்த அதிமுக கொடி மற்றும் தோரணங்களை அகற்ற அவர் உத்தரவிட்டார்.
உடனடியாக பொதுப் பணித்துறையினர் அவற்றை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு வந்த அதிமுக முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், தேர்தல் பார்வையாளர் ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு அதிகாரி வார்னிங் விட்டதையடுத்து வாயைப் பொத்திக் கொண்டு கிளம்பினார்.
எங்கிருந்து மின்சாரம் வருகிறது?
இதன் பின்னர் முதல்வர் பிரச்சாரம் செல்லும் வழியில் அவர் ஆய்வு நடத்தினார்.
அந்த ரோடு புதிதாகப் போடசப்பட்டுள்ளதைப் பார்த்த, அவர் கன்னிகாபுரத்தில் முதல்வரை வரவேற்று கட்டப்பட்டுள்ள அதிமுக கொடிகள்,தோரணங்கள் மற்றும் லைட்டுகளை பார்வையிட்டார். லைட்டுகளுக்கு எங்கிருந்து மின்சாரம் வருகிறது என்று அதிகாரிகளிடம் கேட்டார்.
போஸ்ட் கம்பங்களில் இருந்து அதிமுகவினர் டைரக்ட் கனெக்ஷன் தந்துள்ளதை ராவ் பார்த்தபோது, மழையிலும் அதிகாரிகளுக்குவியர்த்தது.
இதேபோல, செய்யாறில் இருந்து ஏராளமான பெண்களை ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்திய ராவ், வண்டியின் எண் உள்ளிட்டவிவரங்களை குறித்துக் கொள்ள உத்தரவிட்டார்.
ராவ் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக:
பின்னர் நேற்று மாலை காஞ்சிபுரத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கே.ஜே.ராவ் கூட்டினார். இதில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 10கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சியினர் தமிழக அரசு அதிகாரிகள் விதிகளை மீறி செயல்படுவதாகவும், ஏராளமான புதியசாலைகள், புதிய குடிநீர்க் குழாய்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
மேலும் தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள் விதிகளை மீறி செயல்படுவதாகவும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.
பின்னர் ராவை முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர்ராஜா தனியாக சந்தித்து, வரும் 6ம் தேதி அதிமுகவின் சார்பில் மனு கொடுக்கப்படும்என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராவ் பேசுகையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு என்னை சந்திக்க அதிமுகவினருக்கு நேரம்ஒதுக்கியுள்ளேன். காஞ்சிபுரம் தொகுதியில் விதிமுறைகளுக்குப் புறம்பானவற்றை அனுமதிக்க முடியாது. தற்போது இத் தொகுதியில்எந்தளவுக்கு விதிமீறல் இருக்கிறது என்பதை நான் இப்போது கூற முடியாது.
முதல்வர் வந்து சென்ற இடங்களில் விதிகளுக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருந்த தோரணங்கள், கட்அவுட்களை அகற்றச் சொல்லியுள்ளேன்.அவை அகற்றப்பட்டு வருகின்றன.
தொகுதியின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தேன். அனுமதி பெறாத வாகனங்களைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது. அந்த மாதிரியானவாகனங்களை பறிமுதல் செய்யுமாறு ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் ராவ்.
தனது ஆய்வு குறித்து தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிக்க உள்ள ராவ், இன்று கும்மிடிப்பூண்டி செல்லும் ராவ், அங்கு தொகுதியைப்பார்வையிட்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications