ஆதிகேசவனிடம் மாட்டாமல் தப்பிய கமல்
சென்னை:
பிராடு மன்னன் ஆதிகேசவனிடம் நடிகர்கள் கமல், விஜய், மத்திய ரசாயனத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்ஆகியோரும் தொடர்பு கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
என்.ஆர்.ஐக்களிடம் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லித் தான் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்தார் ஆதிகேசவன். இந்நிலையில் தனது மருதநாயகம் படத்துக்கு வெளிநாட்டு இந்தியர்களிடம் கடன் வாங்க பல வகைகளிலும் முயற்சி மேற்கொண்டகமல், ஒரு கட்டத்தில் ஆதிகேசவனையும் நாடியுள்ளார்.
இதையடுத்து கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்ததோடு, ரூ. 15 லட்சத்தை கமிஷனாகக் கேட்டுள்ளார் ஆதிகேசவன். அந்தப்பணத்தை கமல் தந்துள்ளார். ஆனால், ஆதி சொன்னபடி கடன் பெற்றுத் தரவில்லை.
இதையடுத்து தான் கொடுத்த 15 லட்சம் ரூபாயை கமல் திருப்பிக் கேட்கவே, அதைத் திருப்பித் தந்திருக்கிறார் ஆதிகேசவன்.வழக்கமாக வாங்கிய காசை திருப்பித் தராமல் ஆள் வைத்து அடிப்பது, போலி செக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்ஆதி, கமலிடம் பிரச்சனை செய்யாமல் வாங்கிய காசைத் திருப்பித் தந்துவிட்டார்.
அதே போல நடிகர் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகை மனோரமா ஆகியோரும் ஆதியை சந்த்துள்ளனர்.எதற்காக இவர்கள் வந்தனர் என்று தெரியவில்லை.
மத்திய ரசாயனத்துறை அமைச்சரும் லோக் ஜன சக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வானுக்கு ஆதி நெருக்கமாகவேஇருந்துள்ளார். பாஸ்வான் சென்னை வந்தால், அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து படைத்துள்ளார் ஆதி.
அதே போல திமுக தலைவர் கருணாநிதி, மத்திய திமுக அமைச்சர்கள் பாலு, தயாநிதி மாறன் மற்றும் ஸ்டாலின் ஆகியோருடன்நிற்பது போன்ற மெகா சைஸ் போட்டோக்களும் ஆதிகேசவனின் வீட்டில் கிடைத்தன. இவர்களை ஆதியே போய் நிகழ்ச்சிகளில்சந்தித்து உடன் நின்று போட்டோ எடுத்ததாகத் தெரிகிறது.
இதேபோல பட அதிபர் ஒருவருக்கும் ரூ. 1 கோடி கடனாக கொடுத்துள்ளார் ஆதி. அந்தத் தொகையும் வசூலாகி விட்டதாம்.
மேலும் இந்தியாவின் முன்னணி மிக்ஸி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றும் ஆதியிடம் கடன் பெற முயன்று ஏமாந்துள்ளது. தங்களதுதொழிலை விரிவாக்க வெளிநாட்டுக் கடன் பெற அந் நிறுவனம் முயன்றது. ரூ. 200 கோடி கடன் கேட்ட அந்த நிறுவனத்திடம் சிலகோடிகளை கமிஷனாக வாங்கி ஏப்பம் விட்டுள்ளார் ஆதி.
போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 30 லட்சம் !:
இதற்கிடையே, தன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக சென்னை மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்தஇரு அதிகாரிகளுக்கு ரூ. 30 லட்சம் கொடுத்ததாக ஆதி கேசவன் வாக்குமுலம் அளித்துள்ளான்.
இதையடுத்து அந்த இரு போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் நெல்லையைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பல் மற்றும் கிரானைட் ஏற்றுமதி செய்யும் பலருக்கும் ஆதிகேசவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
1000 கோடிக்கு போலி செக் கொடுத்த அபூர்வ ஆதி
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications